லங்காவி பன்னாட்டு வானூர்தி நிலையம்
லங்காவி பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: LGK, ஐசிஏஓ: WMKL); (ஆங்கிலம்: Langkawi International Airport; மலாய்: Lapangan Terbang Antarabangsa Langkawi) என்பது மலேசியா, கெடா மாநிலத்தின் லங்காவி தீவில் அமைந்துள்ள ஒரு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த வானூர்தி நிலையம், கெடா மாநில மக்களுக்கும்; பெர்லிஸ் மாநில மக்களுக்கும்; வானூர்திச் சேவையை வழங்கும் வானூர்தி நிலையமாக விளங்குகிறது. உள்நாட்டுச் சேவை; வெளிநாட்டுச் சேவை என இரு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. 2019-ஆம் ஆண்டில், இந்த வானூர்தி நிலையத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை 2,946,150. அதே வேளையில் 44,599 விமான இயக்கங்களும் நடைபெற்று உள்ளன. பொதுமலேசியப் பெருநிலத்துக் கடற்கரையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. தீபகற்ப மலேசியாவின் நான்காவது பரபரப்பான வானூர்தி நிலையமாகக் கருதப்படுகிறது. லீமா (LIMA) என்று அழைக்கப்படும் லங்காவி அனைத்துலகக் கடல் விண்வெளி கண்காட்சி (Langkawi International Maritime and Aerospace Exhibition) நடைபெறும் இடமாகவும் இந்தப் பன்னாட்டு வானூர்தி நிலையம் விளங்குகிறது. கெடாவில் இரண்டு வானூர்தி நிலையங்கள் உள்ளன: 1. லங்காவி பன்னாட்டு வானூர்தி நிலையம். (லங்காவி) 2. சுல்தான் அப்துல் அலிம் வானூர்தி நிலையம். (அலோர் ஸ்டார்) வரலாறு1945-இல் ஜப்பானிய இராணுவத்தின் வானூர்தி நிலையமாகவும் பின்னர் பிரித்தானிய இராணுவத்திற்கான வானூர்தி நிலையமாகவும் செயல்பட்டது. இந்த வானூர்தி நிலையத்தின் கட்டுமானம் 1991-இல் தொடங்கியது. 1993 டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. செப்டம்பர் 2018-இல், ஆண்டுக்கு 4 மில்லியன் பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில் இந்த வானூர்தி நிலையத்தின் திறன்பாடு மேம்படுத்தப்பட்டது. வானூர்திச் சேவைகள்
உள்நாட்டுச் சேவைகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia