லோங் செரிடான் வானூர்தி நிலையம்
லோங் செரிடான் வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: ODN, ஐசிஏஓ: WBGI); (ஆங்கிலம்: Long Seridan Airport; மலாய்: Lapangan Long Seridan) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தின் மருடி பிரிவு, லோங் செரிடான் கிராமத்தில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.[2] சரவாக் மாநிலத்தின் தலைநகர் கூச்சிங்கிற்கு வட கிழக்கே 590 கி.மீ. (367 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. லோங் செரிடான் வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை 1963-ஆம் ஆண்டில் கூர்கா பொறியாளர்களால் கட்டப்பட்டது. பொதுகெலாபிட் கிராமம், அதைச் சுற்றியுள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் மையமாக உள்ளது. உள்ளூர் மக்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் மருத்துவ உதவிகளுக்காக இந்தக் கிராமத்திற்கு வருகிறார்கள்.[3] லோங் செரிடான் வானூர்தி நிலையம் கெலாபிட் கிராமத்திற்கும், பாராம் ஆற்றுக்கும் இடையில் உள்ளது. வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை, பாராம் ஆற்றில் இருந்து 60 மீட்டர் தொலைவில் தான் உள்ளது. லோங் செரிடான் வானூர்தி நிலையம் 1963-ஆம் ஆண்டில் கூர்கா பொறியாளர்களால் கட்டப்பட்டது. காலப்போக்கில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக வானூர்தி நிலையத்தை மேம்படுத்த பயன்படுத்த வேண்டியிருந்தது.[4] சேவை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia