செண்டராட்டா வானூர்தி நிலையம்
செண்டராட்டா வானூர்தி நிலையம் (ஐசிஏஓ: WMAJ); (ஆங்கிலம்: Jendarata Airport மலாய்: Lapangan Terbang Jendarata) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் பாகன் டத்தோ மாவட்டத்தில் (Bagan Datuk District), ஊத்தான் மெலிந்தாங் (Hutan Melintang) நகருக்கு அருகில் அமைந்துள்ள வானூர்தி நிலையம் ஆகும்.[2] யுனைடெட் பிளான்டேசன் (United Plantations) தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த விமான நிலையம்; அந்தத் தோட்ட நிறுவனத்தினாலேயே இயக்கப் படுகிறது. இந்த நிறுவனம் 1906-ஆம் ஆண்டில் தெலுக் இந்தான், ஊத்தான் மெலிந்தாங், பாகன் டத்தோ பகுதிகளில் ரப்பர் தோட்டங்களை வாங்கத் தொடங்கியது. பொதுசெண்டராட்டா வானூர்தி நிலையத்தில் சிறு விமானங்கள் மட்டுமே தரையிறங்க முடியும். நில வழியாகப் பயணம் செய்வதை விட, சிறு விமானங்கள் மூலமாகப் பயணம் செய்வது பிரித்தானிய தோட்ட நிர்வாகிகளுக்கு மிகவும் வசதியாக அமையும் என்பதால் இந்த விமான நிலையம் உருவாக்கப்பட்டது.[3] இந்த விமான நிலையத்திற்குள் திட்டமிடப்பட்ட விமானப் பயணங்கள் எதுவும் இல்லை; தனியார் விமானங்கள் மட்டுமே பயன்படுத்துகின்றன. அனைத்து விமானப் பயண நடவடிக்கைகளுக்கும் யுனைடெட் பிளான்டேசன் நிறுவனத்தின் முன் அனுமதி தேவை. செண்டராட்டா தோட்டம்செண்டராட்டாவில் யூனிடாட்டா (Unitata) மற்றும் யுனைடெட் பிளான்டேசன் (United Plantation Sdn Bhd) நிறுவனங்களுக்குச் சொந்தமான செம்பனை தொழிற்சாலைகள் உள்ளன. செண்டராட்டா தோட்டம் ஒரு பெரிய செம்பனை தோட்டம் ஆகும். இந்தத் தோட்டம் ஊத்தான் மெலிந்தாங்கிற்கு அருகில் உள்ளது. 1906-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது.[4] சான்றுகள்
மேலும் காண்கபுற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia