லகாட் டத்து வானூர்தி நிலையம்
லகாட் டத்து வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: LDU, ஐசிஏஓ: WBKD); (ஆங்கிலம்: Lahad Datu Airport; மலாய்: Lapangan Terbang Lahad Datu) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் லகாட் டத்து நகரில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும். சபா மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.[3] இந்த வானூர்தி நிலையம் லகாட் டத்து மாவட்டம்; அதன் அண்டை மாவட்டங்களான கினபாத்தாங்கான், பெல்டா சகாபாட் (FELDA Sahabat) மற்றும் கூனாக் (Kunak) மாவட்டம் ஆகியவற்றுக்கும் சேவை செய்கிறது. குறிப்பாக, லகாட் டத்து மாவட்டத்தில் வாழும் மக்களுக்கான வானூர்திச் சேவை மையமாக விளங்குகின்றது. லகாட் டத்து நகரத்தில் இருந்து ஏறக்குறைய 1 கி.மீ. தொலைவில் உள்ளது. பொதுலகாட் டத்து வானூர்தி நிலையத்தில், ATR72 போன்ற பெரிய விமானங்கள் தரை இறங்கும் வசதி உள்ளது. மேலும் இந்த நிலையம் ஆண்டுக்கு 100,000 பயணிகளைக் கையாள முடியும். 2016-ஆம் ஆண்டில், விமான நிலையம் 140,077 பயணிகளையும் 3,713 விமான இயக்கங்களையும் கையாண்டது. லகாட் டத்து நகரம் கோத்தா கினபாலுவில் இருந்து 430 கி.மீ. தொலைவில், தென் கிழக்கே அமைந்து உள்ளது.[4] லகாட் டத்து நகரம்15-ஆம் நூற்றாண்டில் இங்கு ஒரு குடியேற்றம் இருந்ததாக நம்பப்படுகிறது. அகழ்வாராய்ச்சியின் மூலமாக சீனாவின் மிங் வம்சத்தின் (Ming dynasty) சீன மண்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.[5] லகாட் டத்துவின் கிழக்கே துங்கு எனும் பெயரில் ஒரு கிராமம் உள்ளது. இந்தக் கிராமம், 19-ஆம் நூற்றாண்டில் கடல் கொள்ளையர்களுக்கும்; மற்றும் அடிமை வியாபாரிகளுக்கும் பெயர் போன தளமாக விளங்கி உள்ளது.[6] லகாட் டத்து முற்றுகைலகாட் டத்து நகரம் சபா மாநிலத்தின் பிரதான நகரங்களில் ஒன்றாகும். இது தாவாவ் மாவட்டத்தில் ஒரு துணை மாவட்டமாகவும் விளங்குகிறது. இந்த நகரில், இந்தோனேசியாவின் தாக்கத்தை அதிகமாகக் காண முடியும். இங்கு டூசுன் பூர்வீக இனத்தைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். 2013 பிப்ரவரி 13-ஆம் தேதி, இந்த லகாட் டத்து பட்டணத்திற்கு அருகில் இருக்கும் தண்டுவோ (Tanduo) எனும் கிராமத்தில் ஒரு முற்றுகை நடைபெற்றது. சூலு சுல்தானகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட சிலர் தண்டுவோ கிராமத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர். இரு வாரங்கள் போராட்டத்திற்குப் பின்னர் மலேசியப் பாதுகாப்பு படையினர் அந்தக் கிராமத்தை மீட்டு எடுத்தனர். சேவை![]()
போக்குவரத்து புள்ளிவிவரங்கள்
காட்சியகம்லகாட் டத்து வானூர்தி நிலையத்தின் சில காட்சிகள்: மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia