லோங் பாசியா வானூர்தி நிலையம்
லோங் பாசியா வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: GSA, ஐசிஏஓ: WBKN); (ஆங்கிலம்: Long Pasia Airport; மலாய்: Lapangan Long Pasia) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் உட்பகுதி பிரிவு, சிபித்தாங் மாவட்டத்தில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும். சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 300 கி.மீ.; (190 மைல்) தொலைவிலும்; மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து 1,568 கி.மீ. தொலைவிலும் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1000 மீட்டர் உயரத்தில் மலிகான் பீடபூமியில் (Maligan Highlands) உள்ளது. லோங் பாசியா நகரம்லோங் பாசியா கிராமப்புற நகரம், சபாவின் தெற்குப் பகுதியில் உலு பெடாசு (Ulu Padas) எனும் இடத்தில் உள்ளது. உலு பெடாசு பகுதி, சபா மாநிலத்தில் உள்ள சிறப்பான தாவரப் பன்முகத் தன்மை கொண்ட பகுதிகளில் ஒன்றாக அறியப் படுகிறது. கலாசாரம், வரலாறு மற்றும் இயற்கைப் பாரம்பரியம் நிறைந்துள்ள பகுதியாகவும் லோங் பாசியா கிராமம் அறியப் படுகிறது. அத்துடன் முற்றிலும் தனித்துவமான சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.[2] லோங் பாசியா நகரத்தில், லுன் டாயே (Lun Bawang/Lun Dayeh) பழங்குடியினரும்; மேலும் சுமார் 1,000 லுன் பாவாங் மக்களும் வசிக்கின்றனர். வெளி இணைப்புகள்மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia