ரெடாங் வானூர்தி நிலையம்
ரெடாங் வானூர்தி நிலையம் அல்லது ரெடாங் தீவு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: RDN, ஐசிஏஓ: WMPR); (ஆங்கிலம்: Redang Airport அல்லது Redang Island Airport; மலாய்: Lapangan Terbang Redang) என்பது மலேசியா, திராங்கானு, கோலா நெருசு மாவட்டம் (Kuala Nerus District), ரெடாங் தீவில் அமைந்துள்ள வானூர்தி நிலையம் ஆகும். இதன் ஓடுபாதையின் மேற்குப் பகுதி ஒரு நீண்ட மலையின் அடிவாரத்தில் உள்ளது. மற்றொரு மலை முகடு 1 கிலோமீட்டர் (0.6 மைல்) கிழக்கே இணையாகச் செல்கிறது. ஆகவே இந்த ஓடுபாதையை தெற்கில் இருந்துதான் அணுக முடியும். அதனால் வானூர்திகள் தண்ணீருக்கு மேல் பறந்து தரை இறங்குகின்றன.[3] பொதுதீபகற்ப மலேசியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள மிகப்பெரிய தீவுகளில் ஒன்றான ரெடாங் தீவில் இந்த வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. இந்த வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை, அதன் விரிவாக்கத்திற்காக 2009-இல் சிறிது காலத்திற்கு மூடப்பட்டது. ஏப்ரல் 16, 2009-இல் மீண்டும் திறக்கப்பட்டது. மேலும் இந்த ரெடாங் தீவு உலகின் மிக அழகான தீவுகளில் ஒன்றாகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. திராங்கானு மாநிலத்தின் கிழக்கு கடற்கரையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும் இந்தத் தீவு 7 கி.மீ. நீளமும் 6 கி.மீ. அகலமும் கொண்டது.[4] ரெடாங் தீவுக் கூட்டம்ரெடாங் தீவில் ஓர் உயரமான குன்று உள்ளது. அதன் பெயர் புக்கிட் பெசார் (Bukit Besar). கடல் மட்டத்தில் இருந்து 359 மீ. உயரத்தில் உள்ளது. ரெடாங் தீவுக் கூட்டம் மலேசியக் கடல் பூங்காக்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு பாதுகாக்கப் படுகிறது (Gazetted and Protected as Marine Parks of Malaysia). தற்போது, ரெடாங் தீவு, லாங் தெங்கா தீவு (Lang Tengah Island), பெர்கெந்தியான் தீவு (Perhentian Island) மற்றும் கபாசு தீவு (Kapas Island) ஆகிய பெரிய தீவுகளில் மட்டுமே பார்வையாளர்களுக்கான தங்கும் விடுதி வசதிகள் உள்ளன. ரெடாங் கடல் பூங்காகடல் ஆமைகள் முட்டையிடுவதற்கான தளமாகவும் இந்தத் தீவு விளங்குகிறது. மேலும் ஆமைகள் முட்டையிடும் கடற்கரைப் பகுதி மென்மையான வெள்ளை மணலால் மூடப்பட்டு இருக்கும். கடற்கரையில் இருந்து சில மீட்டர் தூரத்தில் பவளப் பாறைகளையும் மீன்களையும் தெளிவாகப் பார்க்கலாம். ரெடாங் கடல் பூங்கா நிர்வாக மன்றம் (Pulau Redang Marine Parks) எனும் ஒரு பாதுகாப்பு மன்றம் உள்ளது. இந்த மன்றம், சுற்றுலாப் பயணிகளின் தவறான நடவடிக்கைகளைத் தவிர்ப்பதில் முதன்மை காட்டுகிறது. கழிவுப் பொருட்களைக் கட்டுப் படுத்துதல்; பவளப் பாறைகளின் வாழ்விடங்களைப் பாதுகாத்தல் போன்றவை அந்த மன்றத்தின் முக்கிய இலக்குகளாக அமைகின்றன. வானூர்தி சேவைகள்
உள்நாட்டு சேவைகள்
வானூர்தி பயணங்கள்
சான்றுகள்
மேலும் காண்கபுற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia