1952 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1952 (1952 Indian vice presidential election) என்பது இந்தியாவில் முதன் முதலில் நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலாகும். முதல் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தால், 1952 மே 12 அன்று வாக்கெடுப்பு நடந்திருக்கும். அட்டவணைதேர்தல் அட்டவணை 1952 ஏப்ரல் அன்று இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.[2]
முடிவுகள்இத்தேர்தலில் இந்திய நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையினைச் சார்ந்த 735 உறுப்பினர்கள் வாக்காளர்களா இருந்தனர். சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் மற்றும் ஜனாப் ஷேக் காதிர் உசேன் ஆகிய இருவர் வேட்புமனு தாக்கல் செய்தனர். காதிர் உசேனின் வேட்புமனுவைத் தேர்தல் அதிகாரி நிராகரித்தார். எனவே சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் 25 ஏப்ரல் 1952[2] துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia