2017 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் 2017, இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவர் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பாக ராம் நாத் கோவிந்த்தும் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி சார்பாக மீரா குமாரும் போட்டியிட்டனர். இத்தேர்தல் 2017 ஆம் ஆண்டு சூலை 17 ஆம் நாள் நடைபெற்றது. 20 சூலை 2017 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பதிவான 97.29% வாக்குகளில், ராம் நாத் கோவிந்த் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ராம் நாத் கோவிந்த் இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக 25 சூலை 2017 அன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.[2] முடிவுகள்20 சூலை 2017 அன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு ராம் நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக 2017 சூலை 25 அன்று புது தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மத்திய மண்டபத்தில் பதவியேற்க, தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங் கேஹரால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.[4]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia