ஆந்திரப் பிரதேச மாவட்டங்களின் பட்டியல்
ஆந்திரப் பிரதேசம் , உத்தராந்திரா , கடற்கரை ஆந்திரா மற்றும் இராயலசீமை ஆகிய மூன்று பிரிவுகளில் 26 மாவட்டங்களைக் கொண்டுள்ளது . உத்தராந்திரா பிரிவு சிறீகாகுளம் , விசயநகர , பார்வதிபுரம் மண்யம் , ஏ எஸ் ஆர் , விசாகப்பட்டினம் மற்றும் அனகாபள்ளிமாவட்டங்களை உள்ளடக்கியது . கடற்கரை ஆந்திரா பிரிவில் காக்கிநாடா , கொனசீமா , கிழக்கு கோதாவரி , மேற்கு கோதாவரி , ஏலூரு , கிருஷ்ணா , என் டி ஆர் , குண்டூர் , பால்நாடு , பாபட்லா , பிரகாசம் மற்றும் நெல்லூர் மாவட்டங்கள். இராயலசீமை பரிவு கர்நூல் , நந்தியால் , அனந்தபூர் , சிறீசத்ய சாய் , கடப்பா , அன்னமய்யா , திருப்பதி மற்றும் சித்தூர் மாவட்டங்களைக் கொண்டுள்ளது . பரப்பளவில் பிரகாசம் மிகப்பெரிய மாவட்டம், விசாகப்பட்டினம் சிறியது. நெல்லூர் அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டம், பார்வதிபுரம் மன்யம் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம். மாவட்டங்கள் நிர்வாக நோக்கங்களுக்காக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வருவாய் பிரிவுகளாகவும் மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. வரலாறுசுதந்திரத்தின் போது இன்றைய ஆந்திரப் பிரதேசம் மெட்ராஸ் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது . கடற்கரை ஆந்திரா மற்றும் இராயலசீமை மதராஸ் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு 1953 ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலம் உருவானது.[1] 1956 மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் விளைவாக, மாநிலத்தின் எல்லைகள் மொழிவழியாக மறுசீரமைக்கப்பட்டன. நவம்பர் 1, 1956 அன்று, ஆந்திரா மாநிலமும் , ஹைதராபாத் மாநிலத்தின் தெலுங்கானா பகுதியும் ஒன்றிணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலமாக உருவாக்கப்பட்டு, ஆந்திரப் பிரதேசம் என மறுபெயரிடப்பட்டது . ஆந்திரப் பிரதேசம் உருவாகும் போது 11 மாவட்டங்களைக் கொண்டிருந்தது. அவை பின்வருமாறு: [2][3]
தெலுங்காணா பிரிக்கப்பட்ட பிறகு, ஆந்திரப் பிரதேசம் 9 மாவட்டங்களை புதிய மாநிலத்திற்கு இழந்தது, ஆனால் போலவரம் திட்டத்தின் ஒரு பகுதியாக கம்மம் மாவட்டத்தில் இருந்து பல பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் மண்டலங்கள் வழங்கப்பட்டது . இவை முறையே கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் சேர்க்கப்பட்டன. [4][5] சனவரி 26, 2022 அன்று, ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது அமைச்சரவை 13 புதிய மாவட்டங்களை முன்மொழிந்து ஆந்திர மாவட்டங்கள் உருவாக்கச் சட்டம், பிரிவு 3(5)ன்[6] கீழ் அறிவிக்கப்பட்டது. அந்த மாவட்டங்களின் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, அரசாங்கம் இறுதி அறிவிப்பை ஏப்ரல் 3, 2022 அன்று வெளியிட்டது, அதாவது, 4 ஏப்ரல், 2022 முதல் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும். அட்டவணையில்.[7][8][9] மாவட்டங்கள்
மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia