இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம்
இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (ஆங்கிலம்: Spider-Man: Far From Home) என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும்.[6] இது மார்வெல் வரைகதை கதாபாத்திரமான ஸ்பைடர் மேன் என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோ நிறுவனங்கள் தயாரிக்க சோனி பிக்சர்ஸ் [7] என்ற நிறுவனம் விநியோகம் செய்தது. இது 2017 ஆம் ஆண்டு வெளியான இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இருபத்தி மூன்றாவது திரைப்படமும் ஆகும். இந்த திரைப்படத்திற்கு கிறிஸ் மெக்கேனா மற்றும் எரிக் சோமர்ஸ் என்பவர்கள் கதை எழுத, ஜோன் வாட்ஸ் என்பவர் இயக்கியுள்ளார்.[8] டாம் ஹாலண்ட், சாமுவேல் எல். ஜாக்சன், ஜெண்டயா, கோபி ஸ்மல்டேர்ஸ், ஜான் பெவ்ரோ, ஜே. பி. சுமூவ், ஜேக்கப் படலோன், மார்டின் இஸ்டார், மரிசா டோமீய், ஜேக் கிலென்ஹால் போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் ஜூன் 26, 2019 அன்று கிராமனின் சீன திரையரங்கில் திரையிடப்பட்டது, இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் மூன்றாம் கட்டத்தின் கடைசி படமாக ஜூலை 2 ஆம் தேதி அமெரிக்காவில் வெளியானது. இந்த திரைப்படம் நகைச்சுவை மற்றும் திரை வண்ணத்திற்கான பாராட்டுக்களைப் பெற்றது. இது உலகளவில் $1.1 பில்லியனுக்கும் அதிகமாக வசூலித்தது, இது பில்லியன் டாலர் மதிப்பைக் கடந்த முதல் ஸ்பைடர் மேன் படமும் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தில் இதுவரை அதிக வசூல் செய்த முதல் படமும் இதுவே. 2019 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த நான்காவது படமாகவும் எல்லா நேரத்திலும் அதிக வசூல் செய்த 24 வது படமும் ஆகும். இதன் மூன்றாவது படம் 2021 டிசம்பர் 17 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கதை சுருக்கம்இது அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படங்களில் நடந்த சம்பவங்களை கடந்து பீட்டர் பார்க்கெர் அவருடைய பள்ளியில் இருந்து ஐரோப்பாவுக்கு சுற்றுப்பயணமாக சக மாணவர்களுடன் அழைத்து செல்லப்படுகிறார். அங்கே மாய சக்திகளை உடைய கதாநாயகரான மெஸ்டிரியோ (ஜேக் கிலென்ஹால்) வேற்று கிரக அரக்கர்களுடன் போராடுவதை பார்க்கிறார். பாதுகாப்பு அமைப்பின் தலைவரான நிக் ப்யூரியின் உதவியுடன் மெஸ்டிரியோவுக்கு அரக்கர்களை எதிர்த்து போராட உதவியும் செய்கிறார். ஆனால் மெஸ்டிரியோவிடம் அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்து அயன் மேனான டோனி ஸ்டார்க்கின் அனைத்து தொழில்நுட்ப அமைப்புகளையும் பாதுகாப்பு சாதனங்களையும் கட்டுப்படுத்தும் இடித் என்ற சிறப்பு கண்ணாடியை மெஸ்டிரியோவுக்கு கொடுக்கிறார். ஆனால் அந்த அரக்கர்கள் எல்லாமே மெஸ்டிரியோவின் மாயை என்று அறியும்போது மெஸ்டிரியோவால் விபத்துக்குள்ளாகி நெதர்லாந்தில் மாட்டிக்கொள்கிறார். டோனி ஸ்டார்க்கின் நண்பரான ஹாப்பி ஹோகனினின் (ஜான் பெவ்ரோ) உதவியுடன் புதிய ஸ்பைடர்மேன் கவசத்தை உருவாக்கி தனியொரு மனிதனாக போராடி மெஸ்டிரியோவை தோற்கடிக்கிறார் இடித் கண்ணாடியை மீட்டமைக்கிறார். மெஸ்டீரியோ அவருடைய கட்டுப்பாட்டில் இருந்த பாதுகாப்பு ஆயுதங்களால் தாக்கப்பட்டு வாழ்க்கையின் முடிவை அடைகிறார். பார்க்கர்/ஸ்பைடர் மேன் அவருடைய தோழியான எம்.ஜே. மிக்கல்லாவிடம் நேசிப்பதை சொல்கிறார். ஆனால் மெஸ்டிரியோவின் குழுவினர் டெய்லி பியூகல் என்ற மிகப்பெரிய தொலைக்காட்சியில் உலக செய்தி ஒளிபரப்பில் ஸ்பைடர்மேனை வில்லனாக மாற்றி அனைத்து சேதங்களுக்கும் ஸ்பைடர்மேன்தான் காரணம் என்று குற்றம் சாட்டி ஸ்பைடர்மேனின் உண்மையான அடையாளம் பீட்டர் பார்க்கெர் என்று உலகசெய்திகளில் வெளிப்படுத்துகின்றனர். நடிகர்கள்
இசைஇந்த திரைபபடத்திற்கான இசையமைப்பாளராக மைக்கேல் ஜெய்சினோ என்பவர் அக்டோபர் 2018 இல் உறுதி செய்யப்பட்டார். அதை தொடர்ந்து இப்படத்திற்கான ஒலித்தட்டுக்கள் 28 ஜூன் 2019 ஆம் ஆண்டு வெளியானது. வெளியீடுஇந்த படம் கிராமனின் சீன திரையரங்கு ஹாலிவுட்ட்டில் ஜூன் 26 ஆம் தேதி திரையிடப்பட்டது. அதை தொடர்ந்து ஜூன் 28 அன்று சீனா மற்றும் ஜப்பானில் மற்றும் அமெரிக்காவில் ஜூலை 2 அன்று 3டி மற்றும் ஐமாக்ஸில் வெளியிடப்பட்டது. இப் படம் முதலில் ஜூலை 5 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த படம் தொழிலாளர் தின வார இறுதியில் ஆகஸ்ட் 29 தொடங்கி நான்கு நிமிட கூடுதல் காட்சிகளுடன் மீண்டும் வெளியிடப்பட்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia