இராப்பட்டீச்சரம் சேசபுரீசுவரர் கோயில்

சேசபுரீசுவரர் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவிடம்:இராப்பட்டீச்சரம்
கோயில் தகவல்
மூலவர்:சேசபுரீசுவரர்
தாயார்:அந்தப்புரநாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

இராப்பட்டீச்சரம் சேசபுரீசுவரர் கோயில் என்ற சிவன் கோயில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

கும்பகோணம் திருவாரூர் பேருந்துச் சாலையில் மணக்காலுக்கு அருகில் உள்ளது.

இறைவன்,இறைவி

இங்குள்ள இறைவன் சேசபுரீசுவரர் ஆவார். இறைவி அந்தப்புர நாயகி ஆவார். [1]

சிறப்பு

மூலவர் திருமேனியில் பாம்பு வடிவம் உள்ளது. பைரவர் இங்கு சிறப்பாக வழிபடப்படுகிறார். கோஷ்டத்தில் இருக்கவேண்டிய தட்சிணாமூர்த்தி மண்டபத்தில் காணப்படுகிறார். [1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya