காரைக்குடி சந்திப்பு தொடருந்து நிலையம்
![]() காரைக்குடி சந்திப்பு தொடருந்து நிலையம் (Karaikudi Junction railway station, நிலையக் குறியீடு:KKDI) இந்தியாவின், தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி மாநகரில் அமைந்துள்ள ஒரு சந்திப்பு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின், மதுரை கோட்டத்தின் கீழ் இயங்குகிறது. இது திருச்சிராப்பள்ளி - மானாமதுரை வழித்தடத்தில் உள்ள ஒரு முக்கிய தொடருந்து சந்திப்பு நிலையமாகும்.[1][2][3]இந்த நிலையம் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 2.40 கீ மீ தொலைவில் உள்ளது. மற்றும் ராஜாஜி புறநகர் பேருந்து நிலையம் 4.50 கீ மீ தொலைவில் உள்ளது கண்ணோட்டம்இந்த நிலையம் 1930-களில் புதுக்கோட்டை - மானாமதுரை சந்திப்புகளுக்கு, இரயில் பாதையின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டது. இது ஒரு சந்திப்பு நிலையமாக இருப்பதால், மூன்று இருப்புப் பாதைகள் நிலையத்திலிருந்து செல்கின்றது, ஒன்று திருச்சிராப்பள்ளி சந்திப்புக்கும், இரண்டாவது திருத்துறைப்பூண்டி சந்திப்புக்கும், மூன்றாவது மானாமதுரை சந்திப்புக்கும் செல்கிறது.[4][5][1][6][7] திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [8][9][10][11][12] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மதுரை தொடருந்து கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, காரைக்குடி சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 7.51 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [13][14][15][16][17] காரைக்குடி ரயில் நிலையத்தில், 7.51 கோடி ரூபாய் செலவில், அமிர்த பாரத் திட்டத்தின் கீழ், 88 சதவீத ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.[18] காரைக்குடி நிலைய நடைமேடை 2 மற்றும் 3 ன் உயரமானது ₹77 லட்சம் செலவில் மேம்படுத்தப்படுகின்றது, மேலும் 24 பெட்டிகள் கொண்ட ரயிலுக்கான நடைமேடை நீட்டிப்பு பணி ₹55 லட்சத்தில் நடந்து வருகிறது. மாற்றுத்திறனாளி பயணிகளும் நடைமேடையை எளிதில் அணுகும் வண்ணம் சாய்வுதளமும் கட்டப்பட்டு வருகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தளங்களில் ஒருங்கிணைந்த பயணிகள் தகவல் அமைப்புகள் மற்றும் மூன்று தூக்கிகள் [லிப்ட்கள்] நிறுவப்பட்டுள்ளன. நடைமேடையின் மேற்கூரைகள் மாற்றியமைக்கப்படுகின்றன, மேற்கூரையுடன் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, காத்திருப்பு கூடம் ஆகிய பணிகள் நிறைவடைந்துள்ளன. ஒரு விதானம், நுழைவு வளைவு மற்றும் இரு சக்கர வாகன நிறுத்துமிடம், சுற்றுப் பகுதிகள் மற்றும் மேம்பாடுகளுடன் கூடிய அணுகு சாலை ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.[19] சேவைகள்காரைக்குடி தலைநகர் சென்னையுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளியில் இருந்து மானாமதுரை, இராமேசுவரம் மற்றும் கன்னியாகுமரி ஆகியவற்றுக்கு செல்லும் பெரும்பாலான தொடருந்துகள் இந்த நிலையம் வழியாக செல்கின்றன, ஒவ்வொரு தொடருந்துகளும் இங்கு குறைந்தபட்சம் 5-10 நிமிடங்கள் நிறுத்தப்படும். செட்டிநாடு அதி விரைவு வண்டி பல்லவன் இங்கிருந்துதான் தனது சேவையை தொடர்கிறது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia