பண்டைய இந்தியக் கல்வெட்டுக்கள், இந்தியத் துணைக்கண்டத்தில் முதன் முதலாக கிடைத்த கல்வெட்டுக்கள், கிமு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து வெளியில் கிடைத்த கல்வெட்டுக் குறிப்புகள் ஆகும். ஆனால் இக்கல்வெட்டுக் குறிப்புகள் இதுவரை யாராலும் முழுமையாக படித்து அறியப்படவில்லை..
அசோகர் காலத்திற்கு முந்தைய கல்வெட்டுகள் இலங்கையின் அனுராதபுரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[7]
கிபி நான்காம் நூற்றாண்டு காலத்திய சமசுகிருத மொழி கல்வெட்டுக் குறிப்புகள் முதன்முதலில் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.[8]
கிபி முதல் ஆயிரமாண்டிற்குப் பின்னர் பாறை, தூண், சமணர் படுகைகள் மற்றும் குடைவரை சுவர்களில் கல்வெட்டுகள் மற்றும் செப்புப் பட்டயங்கள் அதிகம் கண்டறியப்பட்டது.[9]
இந்தியத் துணைக்கண்டத்தில் கிடைத்த கல்வெட்டுகளையும், மற்றும் செப்புப் பட்டயங்களையும், 1886 முதல் தொல்லியல் அறிஞர்கள் ஆய்வு செய்து, அவைகளை தமிழ் பிராமி மற்றும் பிராமி என வகைப்படுத்தி, ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தனர்.[16]
வட இந்தியவில் அசோகரின் கல்வெட்டுக்கள் பிராமி எழுத்துமுறையிலும்; தென்னிந்தியாவின் தமிழ் கல்வெட்டுக்கள் தமிழ் பிராமி எழுத்துமுறையிலும் இருந்தது. பின்னர் தமிழ் பிராமி எழுத்துமுறைகள், வட்டெழுத்து முறையில் மாறி, கோயில் கருங்கல் சுவர்களில் செதுக்கப்பட்டிருந்தது.[17]
கிபி 1-ஆம் நூற்றாண்டு முதல் பட்டிபிரோலு மற்றும் கடம்பர் எழுத்துமுறைகளிலிருந்து கன்னடம் மற்றும் தெலுங்கு எழுத்துமுறைகள் உருவானது.
தென்னிந்திய மன்னர்கள் குறிப்பாக சோழர், விஜயநகரப் பேரரசுகள், கிபி 10-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை, வேளாண் நிலங்கள் மற்றும் வேளாண் நிலத்துடன் கூடிய கிராமங்கள், கோயில்கள், சைவ மடங்கள், அன்னசாலைகள் போன்ற பொதுநிறுவனக் காரியங்களை நிர்வாகிக்க, தனிநபர்களுக்கும், பொதுநிறுவனங்களுக்கும், செப்பேடுகள் மூலம் தானமாக வழங்கியதை வேள்விக்குடி செப்பேடுகள் போன்றவைகள் மூலம் அறியப்படுகிறது.
விஜயநகர பேரரசின் தமிழ் செப்பேடுகள், தர்மேஸ்வரர் கோயில், கொண்டரஹள்ளி, ஒசகோட்டே]
தென்னிந்தியாவில் தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள பகுதிகளில் கல்வெட்டுகள் பிராகிருதம் மற்றும் சமசுகிருத மொழியில் அதிகம் கொண்டிருந்த போதும், தமிழ்நாட்டில் மட்டும் தமிழி எழுத்தில் கொண்டிருந்தது.[20]
இச்சங்க இலக்கியங்கள் கிமு 4 - கிமு 3-ஆம் நூற்றாண்டிற்குள் எழுதப்பட்டிருக்கலாம் அறிஞர்கள் கருதுகிறார்கள்.[22][23][24] கிமு 3-ஆம் நூற்றாண்டு காலத்திய தமிழ் கல்வெட்டுகள் தமிழ் பிராமி எழுத்துமுறையில் இருந்தது.
[25][26]
தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் எழுதப்பட்ட காலம் கிமு 5 – 2-ஆம் நூற்றாண்டு காலமாக இருக்கலாம் அறிஞர்கள் கணித்துள்ளனர்.
↑Coningham, R.A.E.; Allchin, F.R.; Batt, C.M.; Lucy, D. (1996), "Passage to India? Anuradhapura and the Early Use of the Brahmi Script", Cambridge Archaeological Journal, 6 (1): 73–97, doi:10.1017/S0959774300001608
↑Coningham, R.A.E.; Allchin, F.R.; Batt, C.M.; Lucy, D. (1996), "Passage to India? Anuradhapura and the Early Use of the Brahmi Script", Cambridge Archaeological Journal, 6 (1): 73–97, doi:10.1017/S0959774300001608
↑Caldwell, Robert (1875). A comparative grammar of the Dravidian or South-Indian family of languages. Trübner & co. pp. 88. In southern states, every inscription of an early date and majority even of modern day inscriptions were written in Sanskrit...In the Tamil country, on the contrary, all the inscriptions belonging to an early period are written in Tamil with some Prakrit
↑Dating of Indian literature is largely based on relative dating relying on internal evidences with a few anchors. I. Mahadevan’s dating of Pukalur inscription proves some of the Sangam verses. See George L. Hart, "Poems of Ancient Tamil, University of Berkeley Press, 1975, p.7-8
↑George Hart, "Some Related Literary Conventions in Tamil and Indo-Aryan and Their Significance" Journal of the American Oriental Society, 94:2 (Apr – Jun 1974), pp. 157-167.
↑Kamil Veith Zvelebil, Companion Studies to the History of Tamil Literature, pp12
↑Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002)
↑Iravatham Mahadevan (2003). Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D. Cambridge, Harvard University Press.
↑B. C. Jain, Journal of the Epigraphic Society of India 4 (1977): pp. 62-66 and plate facing p. 64.
மேற்கோள்கள்
Salomon, Richard, Indian Epigraphy: A Guide to the Study of Inscriptions in Sanskrit, Prakrit, and the Other Indo-Aryan Languages, Oxford University Press, 1998,பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-19-509984-3
Various (1988) [1988]. Amaresh Datta (ed.). Encyclopaedia of Indian literature – vol 2. Sahitya Akademi. ISBN81-260-1194-7.