வலிகாமம் கிழக்கு பிரதேச சபை

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை
வகை
வகை
தலைமை
தலைவர்
தியாகராசா நிரோஷ், சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி
18 சூன் 2025 முதல்
பிரதித் தலைவர்
தர்மலிங்கம் ஜனார்த்தனன், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு
18 சூன் 2025 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்36
அரசியல் குழுக்கள்
அரசு (10)

எதிர் (26)

ஆட்சிக்காலம்
4 ஆண்டுகள்
தேர்தல்கள்
கலப்பு முறைத் தேர்தல்
அண்மைய தேர்தல்
6 மே 2025

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை (Valikamam East Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 102.20 சதுர மைல்கள். இதன் வடக்கில் கடலும்; கிழக்கில் வல்வெட்டித்துறை நகரசபை, தொண்டைமானாறு நீரேரி, வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை என்பனவும்; தெற்கில் சாவகச்சேரி பிரதேச சபை, நல்லூர் பிரதேச சபை, யாழ்ப்பாண மாநகர சபை என்பனவும்; மேற்கில் நல்லூர் பிரதேச சபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபை, வலிகாமம் வடக்கு பிரதேச சபை என்பனவும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு 22 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 14 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 36 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]

வட்டாரங்கள்

26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம் 12 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் கீழ் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைகள் உள்ளடங்குகின்றன.[3] வலிகாமம் கிழக்கு பிரதேச சபைப் பகுதி 22 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.

வட்டாரங்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
இல. பெயர் இல. பெயர்
1 தம்பாலை கதிரிப்பாய் J282 தம்பாலை கதிரிப்பாய்
J283 இடைக்காடு
J284 வளலாய்
2 பத்தமேனி J281 பத்தமேனி
J285 அச்சுவேலி வடக்கு
3 அச்சுவேலி மேற்கு J275 நவக்கீரி
J287 அச்சுவேலி மேற்கு
4 அச்சுவேலி தெற்கு J286 அச்சுவேலி தெற்கு
5 ஆவரங்கால் மேற்கு J277 ஆவரங்கால் மேற்கு
6 புத்தூர் வடக்கு J276 ஆவரங்கால் கிழக்கு
J280 வாதரவத்தை
7 புத்தூர் கிழக்கு J278 புத்தூர் கிழக்கு
8 புத்தூர் மேற்கு J273 புத்தூர் மேற்கு
9 சிறுப்பிட்டி மேற்கு J271 சிறுப்பிட்டி கிழக்கு
J272 சிறுப்பிட்டி மேற்கு
10 அச்செழு J279 அச்செழு
11 ஊரெழு J267 ஊரெழு
12 உரும்பிராய் வடக்கு J264 உரும்பிராய் வடக்கு
13 உரும்பிராய் கிழக்கு J266 உரும்பிராய் கிழக்கு
14 நீர்வேலி தெற்கு J268 நீர்வேலி தெற்கு
J270 நீர்வேலி மேற்கு
15 நீர்வேலி வடக்கு J269 நீர்வேலி வடக்கு
16 கோப்பாய் வடக்கு J262 கோப்பாய் வடக்கு
17 உரும்பிராய் தெற்கு J265 உரும்பிராய் தெற்கு
18 உரும்பிராய் மேற்கு J263 உரும்பிராய் மேற்கு
19 கோப்பாய் மத்தி J261 கோப்பாய் மத்தி
20 கோப்பாய் தெற்கு J260 கோப்பாய் தெற்கு
21 கல்வியங்காடு J259 கல்வியங்காடு
22 இருபாலை தெற்கு J257 இருபாலை தெற்கு
J258 இருபாலை கிழக்கு

தேர்தல் முடிவுகள்

1998 உள்ளூராட்சித் தேர்தல்

29 சனவரி 1998 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[4][5]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 3,978 37.48% 9
  சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 2,975 28.03% 5
  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 2,909 27.41% 5
  தமிழீழ விடுதலை இயக்கம் 752 7.08% 2
செல்லுபடியான வாக்குகள் 10,614 100.00% 21
செல்லாத வாக்குகள் 1,711
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 12,325
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 54,386
வாக்குவீதம் 22.66%

2011 உள்ளூராட்சித் தேர்தல்

23 யூலை 2011 உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[6]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 16,763 71.22% 16
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ** 6,635 28.19% 5
  ஐக்கிய தேசியக் கட்சி 113 0.48% 0
  மக்கள் விடுதலை முன்னணி 27 0.11% 0
செல்லுபடியான வாக்குகள் 23,538 100.00% 21
செல்லாத வாக்குகள் 2,302
மொத்த வாக்குகள் 25,840
பதிவில் உள்ள வாக்காளர்கள் 46,570
வாக்குவீதம் 55.49%
* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

2018 உள்ளூராட்சித் தேர்தல்

2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 22 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 16 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 38 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[3]

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 12,300 35.09% 15 0 15
  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 5,649 16.11% 3 3 6
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 6,366 18.16% 2 4 6
  சுயேச்சைக் குழு 3,858 11.01% 2 2 4
  தமிழர் விடுதலைக் கூட்டணி** 3,294 9.4% 0 3 3
  இலங்கை சுதந்திரக் கட்சி 2,703 7.71% 0 3 3
  ஐக்கிய தேசியக் கட்சி 884 2.52% 0 1 1
செல்லுபடியான வாக்குகள் 35,054 100.00% 22 16 38
செல்லாத வாக்குகள் 749
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 35,803
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 52,517
வாக்குவீதம் 68.17%
* இதக, புளொட், டெலோ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** தவிகூ, ஈபிஆர்எல்எஃப் (சு) ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

2018 தேர்தலில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைவராக தியாகராஜா நிரோஷ் (உரும்பிராய் கிழக்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக மகேந்திரலிங்கம் கபிலன் (அச்சுவேலி தெற்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[3]

2025 உள்ளாட்சித் தேர்தல்

2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[7] 22 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 14 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 36 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  இலங்கைத் தமிழரசுக் கட்சி 9,881 30.34% 6 5 11
  தேசிய மக்கள் சக்தி 7,908 24.28% 9 0 9
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 5,047 15.50% 2 3 5
சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 4,543 13.95% 4 1 5
  சுயேச்சைக் குழு 1 1,910 5.10% 0 2 2
தமிழ் மக்கள் கூட்டணி 1,662 5.10% 0 2 2
  சுயேச்சைக் குழு 2 531 1.63% 0 1 1
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 946 2.91% 1 0 1
  ஐக்கிய தேசியக் கட்சி 136 0.42% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 32,564 100.00% 22 14 36
செல்லாத வாக்குகள் 707
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 33,271
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 60,074
வாக்குவீதம் 55.38%

2025 தேர்தலில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைவராக தியாகராஜா நிரோஷ் (உரும்பிராய் கிழக்கு, சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி), துணைத் தலைவராக தர்மலிங்கம் ஜனார்த்தனன் (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[8]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017. 
  2. 2.0 2.1 "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017. 
  3. 3.0 3.1 3.2 "Local Authorities Election - 10.02.2018" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 12 May 2025. Retrieved 7 June 2025.
  4. "Election commissioner releases results". TamilNet. 30 January 1998.
  5. D.B.S. Jeyaraj (15 February 1998). "The Jaffna Elections". Tamil Times XVII (2): 12–15. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1998.02&uselang=en. பார்த்த நாள்: 22 மார்ச் 2017. 
  6. "Local Authorities Election - 2011" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 21 December 2018. Retrieved 18 June 2025.
  7. "Local Authorities Election - 6.05.2025 Jaffna District Valikamam East Pradeshia Sabha" (PDF). Department of Elections, Sri Lanka. Archived (PDF) from the original on 29 May 2025. Retrieved 29 May 2025.
  8. "வலிகாமம் கிழக்கு பிரதேச சபை 'சங்கு' – 'சைக்கிள்' அணி வசம்". வணக்கம்லண்டன். Archived from the original on 22 சூன் 2025. Retrieved 22 சூன் 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya