திருவிளக்கு வழிபாடு என்பது இந்து மதத்தில் இடம்பெறும் ஒரு வழிபாட்டு முறையாகும். இறைவனை ஒளிவடிவாக உருவகித்து நலன்களை வேண்டி நடத்தப்படும் வழிபாடு திருவிளக்கு வழிபாடாகும். பொதுவாக பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் திருவிளக்கு வழிபாடு செய்வது மிகச்சிறந்த நற்பலன்களைத் தரவல்லது என நம்பப்படுகிறது. தமிழ் மாதங்களில் 12 மாதங்களிலும் திருவிளக்கு வழிபாடு நடத்தப்படும். அந்தந்த மாதங்களில் ஒவ்வொரு பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்
மோகினி (சமஸ்கிருதம்:मोहिनी, மோகினி) என்பது இந்து கடவுளான திருமால் எடுத்த பெண் அவதாரமாகும். காண்போரை தன்னுடைய மோகனத்தினால் மயக்கும் வல்லமையுடைய இந்த அவதாரம், மோகினி அவதாரம் என்று அழைக்கப்படுகிறது.
மோகினி, சிவனுடன் உடலுறவில் ஈடுபட்டு சாஸ்தா என்ற குழந்தையை தோற்றுவித்தாகவும், பாரதபோரில் களபலி தருவதற்காக தேர்ந்தெடுக்கப்பெற்ற அரவானின் திருமண ஆசையை நிறைவேற்றியதாகவும் கதைகள் கூறப்படுகின்றன.
ஜகத்குரு ராமபத்ராச்சாரியார் மந்தாகினி ஆற்றங்கரையில் சின்முத்திரை காட்டியவாறு தியானத்தில் அமர்ந்திருக்கும் நிலை
படிம உதவி: Nmisra
சின்முத்திரையை காட்டியவாறு ஜகத்குரு ராமபத்ராச்சாரியார்மந்தாகினி ஆற்றங்கரையில் சின்முத்திரை தியானத்தில் அமர்ந்திருக்கும் நிலை. வலதுகையில் சுட்டு விரலால் அதன் பெரு விரலின் நுனியைச் சேர்த்து மற்றைய மூன்று விரல்களையும் வேறாக தனியே நீட்டி உயர்த்திப் பிடித்தல் சின்முத்திரை எனப்படுகிறது.
கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் முதலிய ஐந்து மரங்கள் தேவலோக மரங்கள் என்று அறியப்படுகின்றன. இவை பாற்கடலை கடையும் பொழுது தோன்றியவையாகும்.
கோயில்களில் கருவறைப் பகுதியிலிருந்து வெளியேறும் திருமஞ்சன நீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்ட பகுதி பிரநாளம் எனப்படுகிறது.