செனாய் வானூர்தி நிலைய நெடுஞ்சாலை
மலேசிய கூட்டரசு சாலை 16 அல்லது செனாய் வானூர்தி நிலைய நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 16 அல்லது Senai Airport Highway; மலாய்: Laluan Persekutuan Malaysia 16 அல்லது Jalan Lapangan Terbang Senai) என்பது தீபகற்ப மலேசியா, ஜொகூர், கூலாய் மாவட்டம், செனாய் நகரத்தையும்; செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தையும் இணைக்கும் கூட்டரசு சாலையாகும். அங்கிருந்து மலேசிய கூட்டரசு சாலை 1; மற்றும் சுகூடாய் நெடுஞ்சாலை வழியாக ஜொகூர் பாரு நகரத்துடன் இணைக்கிறது.[1] 4.82 கி.மீ. (3.00 மைல்) நீளம் கொண்ட இந்தச் சாலை செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை செனாய் நகரத்துடன் இணைக்கிறது. அமைவுஇந்த நெடுஞ்சாலை 1970-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1973-ஆம் ஆண்டில், செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் செயல்படத் தொடங்கியபோது, இந்த நெடுஞ்சாலையும் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. மலேசிய கூட்டரசு சாலை 16-இன் கிலோமீட்டர் 0 (Kilometre Zero) என்பது செனாய் நகரத்தில் உள்ளது. மலேசிய கூட்டரசு சாலை 16-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஜொகூர், கூலாய் மாவட்டம், செனாய் நகரில் அமைந்துள்ளது. ஜொகூர் பாரு மாநகரத்தில் இருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தீபகற்ப மலேசியாவின் ஐந்தாவது பரபரப்பான வானூர்தி நிலையமாக விளங்குகிறது.[2] இந்த வானூர்தி நிலையம் 1974-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. செனாய் வானூர்தி நிலையம் ஆண்டுக்கு 4.5 மில்லியன் பயணிகளையும் 80,000 டன் சரக்குகளையும் கையாளும் திறன் கொண்டது. 4E தரத்தில் 3,800-மீட்டர் ஓடுபாதை கொண்ட செனாய் வானூர்தி நிலையத்தினால், ஏர்பஸ் ஏ350 (Airbus A350 XWB); போயிங் 777 (Boeing 777) மற்றும் அன்டோனோவ் ஆன்-124 (Antonov An-124) சரக்கு விமானம் போன்ற பெரிய ஜெட் விமானங்களையும் கையாள முடியும்.[3] இடைமாற்று வழிகளின் பட்டியல்
விளக்கம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia