இத்திட்டம்
விலங்குரிமை தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்குவதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் விலங்குரிமை மற்றும்
நனிசைவம் தொடர்பான கட்டுரைகளை இயற்றும் விக்கிப்பயனர்களை இணைக்கவும், அவர்களுக்கு வழிகாட்டி உதவி புரியவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.
தாங்களும் இத்திட்டத்தின் கீழ் இணைந்து விலங்குரிமைக்கும், நனிசைவத்திற்கும், தமிழுக்கும் தொண்டு செய்ய இயலும். அதற்கு இங்குள்ள 'திட்ட உறுப்பினர்கள்' பகுதியில் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ளவும். பின் கீழ்க்கண்ட தலைப்புகளில் தாங்கள் கட்டுரைகளை இயற்றலாம். உதவி தேவைப்பட்டால் ஆலமரத்தடியில் அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கவும்.
கூடுதலாக விலங்குரிமை வலைவாசல் பக்கத்தையும் பார்க்கவும்.