1950 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1950 என்பது இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஆகும். இத்தேர்தலை 24 சனவரி 1950 அன்று நடத்திடத் திட்டமிடப்பட்டிருந்தது. இப்பதவிக்கு இராசேந்திர பிரசாத் என்ற ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே விண்ணப்பிருந்தார். இதனால் இராசேந்திர பிரசாத் இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] விவரங்கள்1950ஆம் ஆண்டு சனவரி 24ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு (சனவரி 26, 1950) வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் கடைசியாகக் கூடியது. அன்று, ஜன கண மன பாடலை இந்தியாவின் தேசிய கீதம் என்று அறிவித்து. அரசியலமைப்பின் இந்தி நகலில் கையெழுத்திட்டு புதிய குடியரசுத் தலைவருக்கு வாக்களித்தனர். பிரசாத் திசம்பர் 1946 முதல் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் தலைவராக இருந்தார். இவர் ஜவஹர்லால் நேருவால் முதல் இந்திய ஜனாதிபதியாக முன்மொழியப்பட்டார். இவரை வல்லபாய் பட்டேல் ஆதரித்தார்.[3] வேறு பரிந்துரைகள் எதுவும் இல்லை, எனவே, இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு இராஜேந்திர பிரசாத் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சட்டமன்றத்தின் செயலாளர் எச். வி. ஆர். அய்யங்கார் அறிவித்தார். ![]() இராஜேந்திர பிரசாத் 1950ஆம் ஆண்டு சனவரி 26 ஆம் தேதி முதல் குடியரசு தினத்தன்று, இந்தியத் தலைமை நீதிபதி அரிலால் ஜெகிசுந்தாசு கனியா முன்னிலையில், இந்தியத் தலைமை ஆளுஞர் ச. இராஜகோபாலாச்சாரியால் பதவியேற்பு செய்துவைக்கப்பட்டார்.[4] பிரசாத்தின் சகோதரி பகவதி தேவி முந்தைய நாள் சனவரி 25 அன்று இறந்துவிட்டார். பதவியேற்பு நிகழ்விற்குப் பின்னர் இராஜேந்திரப் பிரசாத் தனது சகோதரியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.[5] மேற்கோள்கள்
மேலும் பார்க்கவும் |
Portal di Ensiklopedia Dunia