1992 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்
பின்புலம்ஜூலை 24, 1992ல் இந்தியாவின் பத்தாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. 1987-92 காலகட்டத்தில் குடியரசுத் தலைவராக இருந்த ரா. வெங்கட்ராமன் மீண்டும் போட்டியிடவில்லை. துணைக் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா ஆளும் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவருக்கு சிபிஎம், அரியானா விகாஸ் பரிசத் போன்ற கட்சிகளும் ஆதரவளித்தன. அவருக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி, ஜனதா தளம்/தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியினரான ஜி. ஜி. சுவெல்லை வேட்பாளாராக்கின. இவர்களைத் தவிர வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, காக்கா ஜோகீந்தர் சிங் ஆகியோரும் சுயேட்சை வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். சங்கர் தயாள் சர்மா 65 % வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். முடிவுகள்
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia