2007 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 2007 (2007 Indian vice-presidential election) என்பது 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க 10 ஆகத்து 2007 அன்று நடைபெற்ற தேர்தலாகும். இந்தியத் தேசிய காங்கிரசைச் சேர்ந்த முகமது அமீத் அன்சாரி இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] தற்போதைய, பைரோன் சிங் செகாவத் மறுதேர்தலைக் கோரவில்லை; அதற்குப் பதிலாக 2007 தேர்தலில் இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இத்தேர்தலில் இவர் பிரதிபா பாட்டிலிடம் தோல்வியடைந்தார். பாட்டில் பதவியேற்பதற்கு சில நாட்களுக்கு முன்பு இவர் குடியரசுத் துணைத்தலைவர் பதவியிலிருந்து விலகினார். பின்னணிஇந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். பைரோன் சிங் செகாவத்தின் பதவிக்காலம் ஆகத்து 18, 2007 வரை இருந்ததால், இவரைத் தொடர்ந்து பொறுப்பேற்பவரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் தேவைப்பட்டது.[1] வாக்காளார்கள்இத்தேர்தலில் 245 மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் 545 மக்களவை உறுப்பினர்கள் என மொத்தம் 790 வாக்காளர்கள் உள்ளனர். அதிகாரிகள்தேர்தல் அதிகாரி: முனைவர் யோகேந்திர நரேன், பொதுச் செயலாளர், மக்களவைஉதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்: என். சி. ஜோஷி & ரவி காந்த் சோப்ரா[1] முடிவுகள்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 2007-முடிவுகள்
மேலும் பார்க்கவும்மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia