கும்பகோணம் தொடருந்து நிலையம்
கும்பகோணம் தொடருந்து நிலையம் (Kumbakonam Railway Station, நிலையக் குறியீடு:KMU) இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது சென்னை எழும்பூர் – தஞ்சாவூர் முக்கிய வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயின், திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் கீழ் இயங்குகிறது.[1] வரலாறுகும்பகோணம் தொடருந்து நிலையம் ஆனது, 1877 பிப்ரவரி 15 ஆம் தேதி பயணிகள் சேவைக்கு திறக்கப்பட்டது, அப்போது தென்னிந்திய இரயில்வே தஞ்சாவூர் மற்றும் மாயவரம் (தப்போது மயிலாடுதுறை) இடையே 70.42 கி.மீ தூரத்திற்கு தொடருந்து போக்குவரத்தைத் தொடங்கியது. அமைவிடம்இந்நிலையம் கும்பகோணத்தில், காமராஜர் நகரில் அமைந்துள்ளது. இந்நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் 900மீ தொலைவிலும், நகரப் பேருந்து நிலையம் 1000மீ தொலைவிலும் உள்ளது. நகரப் பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையத்துடன், நேரடியாக இணைக்கப்பட்ட நகரப் பேருந்துகள் மற்றும் சிற்றுந்து சேவைகள் உள்ளன. இதன் அருகிலுள்ள வானூர்தி நிலையம், 81 கிலோமீட்டர் (50 மைல்) தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5][6] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, கும்பகோணம் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 120 கோடி 60 இலட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[7][8][9][10][11][12][13] வழித்தடங்கள்
அருகிலுள்ள நிலையங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia