திருமாந்துறை அட்சயநாதசுவாமி கோயில்

அருள்மிகு அட்சயநாதசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:திருமாந்துறை, திருவிடைமருதூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவிடைமருதூர்
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:அட்சயநாதசுவாமி
தாயார்:யோகநாயகி அம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:வைகாசி விசாக திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பன்னிரண்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

திருமாந்துறை அட்சயநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், திருமாந்துறை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[2]

வரலாறு

இக்கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

இரு மாந்துறைகள்

தமிழ்நாட்டில் மாந்துறை என்ற பெயரில் இரண்டு சிவன் கோயில்கள் உள்ளன. அவை வடகரை மாந்துறை, தென்கரை மாந்துறை என்று அழைக்கப்படுகின்றன.வடகரை மாந்துறை, திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் வழியிலுள்ள பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் 58ஆவது தலமாகும். தென்கரை மாந்துறை, கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறையிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் சூரியனார்கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு தேவார வைப்புத் தலமாகும்.[3] இது தென்கரை மாந்துறையில் உள்ள சிவன் கோயில் ஆகும்.

கோயில் அமைப்பு

இக்கோயிலில் அட்சயநாதசுவாமி, யோகநாயகி அம்பாள் சன்னதிகளும், விநாயகர், சுப்ரமணியர், மகாலெட்சுமி, மகாவிஷ்ணு, நால்வர், அரதத்தர், மாரியம்மன் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் திருவாவடுதுறை ஆதினத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[4]

பூசைகள்

இக்கோயிலில் காரணாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. வைகாசி மாதம் வைகாசி விசாக திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  3. விவசாயம், நீர்வளம் மேம்பட ஒரு ஆலயம் - தென்கரை மாந்துறை, தினமணி, 21 அக்டோபர் 2016
  4. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya