திருவண்ணாமலை தொடருந்து நிலையம்
திருவண்ணாமலை இரயில் நிலையம் (Tiruvannamalai railway station, நிலையக் குறியீடு:TNM) இந்தியாவின், தமிழ்நாட்டின், திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இது திருவண்ணாமலை நகர மக்கள் பயன்பாட்டில் உள்ள முதல் பிரதான தொடருந்து நிலையம் ஆகும். இது தென்னகத்தின் பழைய மெயின் லைன் எனப்படும் சித்தூர் - காட்பாடி - திருவருணை - அரகண்டநல்லூர் - பண்ருட்டி - கடலூர் தொடருந்து பாதையில் அமைந்துள்ளது. சேவைகள்இந்த தொடருந்து நிலையம் தென்னக இரயில்வேயின் பழைய மெயின் லைன் எனப்படும் சித்தூர், காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், கடலூர் தொடருந்து பாதையில் திருவண்ணாமலை உள்ளது. இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1867 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. திருவண்ணாமலை தொடருந்து பாதை மின்மயமாக்க பட்ட தொடருந்து பாதையாகும். திருவண்ணாமலை வழியாக பிற நகரங்களுக்கு செல்லும் ரயில்கள்:
சிறப்புஇந்த தொடருந்து நிலையம் வழியே செல்லும் அனைத்து தொடருந்துகளும் நின்று செல்கிறது. இது மக்கள் பயன்பாட்டிற்கு 1889இல் திறக்கப்பட்டது. ஆன்மீகக் குரு இரமண மகரிசி, இந்த ரயில் நிலையத்தில் தான் 1891இல் திருவண்ணாமலை வந்தடைந்தார்.[2] திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[3][4][5][6][7] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி தொடருந்து கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, திருவண்ணாமலை தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 8.17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[8][9][10][11][12] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia