நாமக்கல் தொடருந்து நிலையம்
நாமக்கல் தொடருந்து நிலையம் (Namakkal railway station, நிலையக் குறியீடு:NMKL) இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள, நாமக்கல் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இந்த நிலையம் புதிதாக உருவாக்கப்பட்ட சேலம் - கரூர் பாதையில் இருக்கும் ஒரு நிலையமாகும். இது மே 2013 ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது.[2] இந்த நிலையம் இந்திய இரயில்வேயின், தெற்கு இரயில்வே மண்டலத்தால் இயக்கப்படும், சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது. இது கரூர் - சேலம் வழிதடத்தில் உள்ள ஒரு முக்கியமான நிலையம். பெங்களூரு, மைசூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கு தினசரி தொடருந்துகளும், ராமேஸ்வரம் மற்றும் நாகர்கோயில் ஆகிய பகுதியில் இருந்து வாராந்திர தொடருந்துகளும் இயக்கப்படுகிறது. திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [3][4][5][6][7] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சேலம் கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, நாமக்கல் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 13.28 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[8][9][10][11][12][13][14][15]
போக்குவரத்துஇந்த நிலையம் வழியாக செல்லும் அனைத்து தொடருந்துகளும் நிறுத்தப்படுகிறது. இயக்கப்படும் தொடருந்துகள்தினசரி தொடருந்துகள்கரூரை நோக்கி செல்லும் தொடருந்துகள்
சேலம் நோக்கி செல்லும் தொடருந்துகள்
சிறப்பு தொடருந்துகள்கரூரை நோக்கி செல்லும் தொடருந்துகள்
சேலம் நோக்கி செல்லும் தொடருந்துகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia