பருத்தித்துறை பிரதேச சபை |
---|
 |
வகை |
---|
வகை | |
---|
உறுப்பினர்கள் | 20 |
---|
தேர்தல்கள் |
---|
அண்மைய தேர்தல் | 2025 |
---|
பருத்தித்துறை பிரதேச சபை (Point Pedro Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். பருத்தித்துறை நகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை ஆகியவற்றுக்குள் அடங்கும் பகுதிகளைத் தவிர்த்து, பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 185.00 சதுர மைல்கள். இதன் வடக்கில் கடலும்; கிழக்கில் பருத்தித்துறை நகரசபை, கடல் என்பனவும்; தெற்கில் முல்லைத்தீவு மாவட்டம், யாழ்ப்பாண நீரேரி ஆகியனவும்; மேற்கில் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேச சபை, கிளிநொச்சி மாவட்டம் என்பனவும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 12 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 8 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 20 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]
வட்டாரங்கள்
பருத்தித்துறை பிரதேச சபைப் பகுதி 10 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.[3][4]
வட்டாரங்கள் |
கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
|
இல. |
பெயர் |
இல. |
பெயர்
|
1 |
கெருடாவில் |
J385 |
கெருடாவில் தெற்கு (பகுதி)
|
J387 |
கெருடாவில் கிழக்கு (பகுதி)
|
2 |
பொலிகண்டி |
J394 |
பொலிகண்டி கிழக்கு
|
J396 |
அல்வாய் மேற்கு
|
J397 |
அல்வாய் வடமேற்கு
|
3 |
அல்வாய் |
J398 |
அல்வாய் வடக்கு மத்தி
|
J399 |
வியாபாரிமூலை
|
J400 |
அல்வாய் வடக்கு
|
4 |
புலோலி மேற்கு |
J410 |
புலோலி மேற்கு
|
J411 |
புலோலி தென்மேற்கு
|
J412 |
புலோலி வடமேற்கு
|
5 |
புலோலி கிழக்கு |
J406 |
கற்கோவளம்
|
J408 |
புலோலி வடகிழக்கு
|
J413 |
புலோலி கிழக்கு
|
6 |
வல்லிபுரக் கோயில் |
J414 |
புலோலி தெற்கு
|
J415 |
மந்திகை
|
J416 |
வல்லிபுரம்
|
J417 |
துன்னாலை வடக்கு
|
7 |
குடத்தனை |
J418 |
மணற்காடு
|
J419 |
குடத்தனை
|
J420 |
குடத்தனை கரையூர்
|
J421 |
பொற்பதி
|
J422 |
அம்பன்
|
8 |
நாகர்கோயில் - செம்பியன்பற்று |
J423 |
நாகர்கோயில் கிழக்கு
|
J424 |
நாகர்கோயில் மேற்கு
|
J425 |
நாகர்கோயில் தெற்கு
|
J426 |
செம்பியன்பற்று வடக்கு
|
J427 |
செம்பியன்பற்று தெற்கு
|
J428 |
மதுரங்கேணி
|
9 |
உடுத்துறை |
J429 |
வத்திராயன்
|
J430 |
உடுத்துறை
|
J431 |
ஆழியவளை
|
10 |
முள்ளியான் |
J432 |
வெற்றிலைக்கேணி
|
J433 |
முள்ளியான்
|
J434 |
பொக்கறுப்பு
|
J435 |
சுண்டிக்குளம்
|
தேர்தல் முடிவுகள்
1998 உள்ளாட்சித் தேர்தல்
29 சனவரி 1998 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:[5][6]
2011 உள்ளாட்சித் தேர்தல்
23 யூலை 2011 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:[7]
2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்
2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 12 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 9 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 21 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் முடிவுகள் வருமாறு:[8]
கூட்டணிகளும் கட்சிகளும் |
வாக்குகள் |
% |
வட்டாரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் |
பெற்ற வாக்குகளுக்குரிய கூடுதல் உறுப்பினர்கள் |
உரித்தான முழு உறுப்பினர்களின் எண்ணிக்கை
|
|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு*
|
6,532 |
33.32% |
8 |
0 |
8
|
|
ஐக்கிய தேசியக் கட்சி
|
795 |
4.06% |
0 |
1 |
1
|
|
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
|
3,588 |
18.30% |
1 |
2 |
3
|
|
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
|
3,897 |
19.88% |
2 |
2 |
4
|
|
தமிழர் விடுதலைக் கூட்டணி **
|
1,830 |
9.34% |
0 |
2 |
2
|
|
சிறீ லங்கா சுதந்திரக் கட்சி
|
2.049 |
10.45% |
1 |
1 |
2
|
|
இலங்கை பொதுசன முன்னணி
|
912 |
4.65% |
0 |
1 |
1
|
செல்லுபடியான வாக்குகள்
|
19,603 |
100.00% |
12 |
9 |
21
|
செல்லாத வாக்குகள்
|
305 |
|
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்
|
19,908 |
|
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்
|
29,394 |
|
வாக்குவீதம்
|
67.73% |
|
* இதக, புளொட், டெலோ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது. ** தவிகூ, ஈபிஆர்எல்எஃப் (சு) ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
2025 உள்ளூராட்சித் தேர்தல்
2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[9] 12 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 8 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 20 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேற்கோள்கள்
|