அடிப்படையான சுகாதாரத்திற்குத் தேவையான மிக முக்கியமான மருந்துகளின் பட்டியலில், கால்சியம் குளுக்கோனேட்டு ஒரு அத்தியாவசியமான மருந்து என உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது.[1]
மருத்துவப் பயன்கள்
சுண்ணாம்புச்சத்துக் குறைபாடு
இரத்தத்தில்கால்சியம் பற்றாக்குறை உள்ளவர்களுக்கு 10% கால்சியம் குளுக்கோனேட்டுக் கரைசலைநரம்புகள் வழியாக உட்செலுத்தி சிகிச்சை அளிப்பது மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் சிகிச்சை முறையாகும். செலுத்தப்படும் கால்சியத்தின் இவ்வடிவம் கால்சியம் லாக்டேட்டு[2]வாக உறிஞ்சப்படுவதில்லை. மற்றும் அது 0.93 (930 மி.கி / டெ.லி) சதவீத கால்சியம் அயனியை மட்டுமே கொண்டிருக்கிறது. (1 கிராம் எடையுள்ள கரைபொருள் 100 மி.லி கரைப்பானில் கரைந்து 1 சதவீதக் கரைசலை எ/ப உருவாக்க வேண்டும் என்பது வரை யறையாகும்.) எனவே இரத்தத்தில் கால்சியம் பற்றாக்குறை கடுமையாக இருக்கும் நிகழ்வுகளில் கால்சியம் குளுக்கோனேட்டுக்குப் பதிலாக கால்சியம் குளோரைடு கொடுக்கப்படுகிறது.
மிகை மக்னீசியம் சல்பேட்டு கட்டுப்படுத்தியாக
எப்சம் உப்பு எனப்படும் மக்னீசியம் சல்பேட்டு[3]தேவைக்கு அதிகமாக உடலில் அளவு மீறும் போது அதைக் கட்டுப்படுத்த கால்சியம் குளுக்கோனேட்டு பயன்படுத்தப்படுகிறது. திடீர் நோய் தாக்கத்தில் இருந்து கருவுற்ற பெண்களைக் காப்பாற்ற முன்காப்பாக எப்சம் உப்புகள் கொடுக்கப்படுவது வழக்கமாகும்.கருவுற்ற மகளிர் குறைப்பிரசவத்திற்கு ஆளாகும் போது தொடர்ந்து மக்னீசியம் சல்பேட்டு கொடுக்கப்படுவதில்லை. பக்க விளைவில்லாத மேம்பட்ட வேறு மகப்பேறு மருந்துகள் இங்கு பயன்படுத்தப்படுகின்றன. அளவுக்கு மீறிய மக்னீசியம் சல்பேட்டு நஞ்சாக உடலுக்கு தீங்கிழைக்கிறது. இதனால் சுவாசக் குறைவும் தசைநாண் மீட்சிகளில் தொய்வும் ஏற்படவும் கூடும். இவ்விடத்தில்தான் கால்சியம் குளுக்கோனேட்டு எதிர்வினை புரிந்து மக்னீசியம் சல்பேட்டைக் கட்டுப்படுத்துகிறது.
ஐதரோ புளோரிக் அமிலத் தீக்காயச் சிகிச்சையில்
ஐதரோ புளோரிக் அமிலத்தினால் உண்டாகும் தீக்காயங்களுக்குச் சிகிச்சை அளிக்க கால்சியம் குளுக்கோனேட்டு கூழ்மங்கள் பயன்படுகின்றன[4][5]. இவை ஐதரோ புளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து கரையாத நச்சுத்தன்மையற்ற கால்சியம் புளோரைடாக மாறிவிடுகிறது.
உயர் பொட்டாசியம் அளவைக் கட்டுப்படுத்துவதில்
இரத்தத்தில் பொட்டாசியம் அளவு மிகுதியாகும் பொழுது இதயத்தை பாதிப்பிலிருந்து காக்கும் முகவராக கால்சியம் குளுக்கோனேட்டு பயன்படுகிறது. பொட்டாசியம் அளவில் எந்தவிதமான மாற்றத்தையும் இது செய்வதில்லை என்றாலும் இதயத் தசைகளின் செயல்பாட்டைக் கண்காணிக்கிறது. இதயத் துடிப்பின் சீர்பிறழ்வுகள் வளர்வதைக் குறைக்கிறது[6].
கருப்பு விதவைச்சிலந்தி கடிச் சிகிச்சையில்
பெருஞ்சிலந்தி குடும்ப வகையைச் சார்ந்த கருப்பு விதவைச்சிலந்தி கடியினால் உண்டாகும் குழைமசந்திச் சீர்குலைவு சிகிச்சையில் கால்சியம் குளுக்கோனேட்டு பயன்படுகிறது[7]. பெரும்பாலும் தசைத் தளர்த்தியாக இது ஒன்றிப்போகிறது. இருந்தாலும் இச்சிக்கிச்சை நடைமுறைப்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளது.[8][9]
பக்க விளைவுகள்
குமட்டல் , மலச்சிக்கல், வயிற்று எரிச்சல் போன்ற பக்க விளைவுகளை கால்சியம் குளுக்கோனேட்டு உண்டாக்குகிறது. விரைவாக இதை நரம்பு வழியாகச் செலுத்தும்போது அதிகளவு கால்சியம் இரத்தத்தில் மிகுந்து அதனால் நாளவிரிவு மற்றும் இதயத்துடிப்பு பிறழ்வுகள், இரத்த அழுத்தக் குறைவு மற்றும் குறை இதயத் துடிப்பு முதலிய பாதிப்புகள் உண்டாகலாம். குழாய் கசிவினால் வெளியாகும் கால்சியம் குளுக்கோனேட்டால் உயிரணு அழற்சி ஏற்படலாம். நரம்புகள் வழியாக இதைச் செலுத்தும் போது அப்பகுதியில் திசு இறப்பு மற்றும் சீழ்கட்டிகள்[10]
தோன்றலாம்.
சிறுநீர்ப் பெருக்கம், உப்புமிகைச் சிறுநீர், சிறுநீரகத்தில் பிளாசுமா ஓட்டம் முதலான பாதிப்புகள்[11][12], குளோமருல நீரகவழல் விகிதம்[13] மற்றும் இரைப்பை சுரப்படக்குதல் ஆகிய பாதிப்புகளும் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.[14]
↑Parham, W. A.; Mehdirad, A. A.; Biermann, K. M.; Fredman, C. S. (2006). "Hyperkalemia revisited". Texas Heart Institute journal / from the Texas Heart Institute of St. Luke's Episcopal Hospital, Texas Children's Hospital33 (1): 40–47. பப்மெட்:16572868.
↑Pestana, Carlos Dr. Pestana Surgery Notes Kaplan Medical 2013