கால்சியம் பென்சோயேட்டு
கால்சியம் பென்சோயேட்டு (Calcium benzoate) என்பது Ca(C7H5O2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். பென்சோயிக் அமிலத்தினுடைய கால்சியம் உப்பான இச்சேர்மம் உணவுத் தொழிற்சாலைகளில் பாதுகாப்புப் பொருளாக உபயோகப்படுத்தப்படுகிறது. உணவுக் கூட்டுப் பொருளுக்கான இதனுடைய ஐ எண் 213 மற்றும் சர்வதேச திட்ட எண்ணிடலில் இதனுடைய உணவுக் கூட்டுப் பொருளுக்கான எண் ச.தே.தி எண் 213 ஆக குறிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம்[1], ஐக்கிய அமெரிக்கா, ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் கால்சியம் பென்சோயேட்டு ஒரு உணவுக் கூட்டுப்பொருளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது[2]. கால்சியம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற உலோகங்களின் கால்சியம் கார்பாக்சிலேட்டு வழிப்பொருட்கள் யாவும் அணைவுச் சேர்மங்களாகும். பொதுவாக இவற்றின் ஒருங்கிணைப்பு எண் 8 ஆகும். தவிர கார்பாக்சிலேட்டுகள் Ca-O பிணைப்புகளாக உருவாகின்றன. இவற்றின் நீரேறும் அளவு மற்றொரு மாறுபடும் பொருளாகக் கருதப்படுகிறது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia