கொருக்குப்பேட்டை தொடருந்து நிலையம்
கொருக்குப்பேட்டை தொடருந்து நிலையம் (Korukkupet railway station) என்பது சென்னை புறநகர் இருப்புவழியில் சென்னை மத்திய தொடருந்து நிலையம் - கும்மிடிப்பூண்டி பிரிவில் உள்ள தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது சென்னையின் புறநகர்ப் பகுதியான கொருக்குப்பேட்டைக்கும் அருகில் உள்ளப் பகுதிகளுக்கும் தொடருந்து சேவையினை செய்கிறது. கொருக்குப்பேட்டைசென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையத்திற்கு வடக்கே 4 கி.மீ. தொலைவிலும் கடல் மட்டத்திலிருந்து 7 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. வரலாறுகொருக்குப்பேட்டை தொடருந்து நிலையம் நகரின் இரயில்வே வலையமைப்பின் வைர சந்திப்பிற்கு வடக்கே அமைந்துள்ள முதல் இரயில் நிலையம் ஆகும். 1979ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி சென்னை மத்திய தொடருந்து நிலையம்-கும்மிடிப்பூண்டி பிரிவின் மின் மயமாக்கலுடன் நிலையத்தில் உள்ள பாதைகள் மின் மயமாக்கப்பட்டன.[1] வளர்ச்சிகள்2007 ஆம் ஆண்டில், சாலை குறுக்கீடு எண். 1ஐ[2] மாற்றுவதற்கான சாலை மேம்பால திட்டம் ₹ 140 மில்லியன் செலவில் அனுமதிக்கப்பட்டது. வேலை 2009-ல் தொடங்கப்பட்டு 2012[3] ஆண்டின் இறுதியில் முடிவடைந்தது. இருப்பினும், தொடருந்து நிலையத்தில் பல அடிப்படை வசதிகள் இல்லை.[4] மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia