உலு சிலாங்கூர் நகராட்சி
Hulu Selangor Municipal Council Majlis Perbandaran Hulu Selangor
உள்ளாட்சி சட்டம் 1976 உலு சிலாங்கூர் நகராட்சி சின்னம்
வரலாறு தோற்றுவிப்பு 1 சனவரி 1977 தலைமை நகர முதல்வர்
முகமட் அசுரி நோர் முகமட்
(Mohd Hasry Nor Mohd)
8 செப்டம்பர் 2021
[ 1] கட்டமைப்பு உறுப்பினர்கள் 24 அரசியல் குழுக்கள்
நகராட்சி மன்ற உறுப்பினர்கள்: கூடும் இடம் உலு சிலாங்கூர் நகராட்சி தலைமையகம் Jalan Bukit Kerajaan, 44000 Kuala Kubu Bharu சிலாங்கூர் வலைத்தளம் www .mphs .gov .my அரசியலமைப்புச் சட்டம் உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா) Local Government Act 1976
உலு சிலாங்கூர் நகராட்சி (மலாய் : Majlis Perbandaran Hulu Selangor ; ஆங்கிலம் : Hulu Selangor Municipal Council ); (சுருக்கம்: MPHS ) என்பது மலேசியா , சிலாங்கூர் , உலு சிலாங்கூர் மாவட்டம் (Hulu Selangor District ); மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களை நிர்வகிக்கும் நகராட்சி ஆகும். இந்த நகராட்சி மலேசியாவின் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் இயங்குகிறது.[ 2]
உலு சிலாங்கூர் மாவட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கின் (Klang Valley )வடக்கில் 174,047 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது; ஏறக்குறைய மலாக்கா மாநிலத்தின் பரப்பளவைக் கொண்டது.[ 2]
உலு சிலாங்கூர் மாவட்டம், சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் மிகப் பெரியது. இது வடக்கில் பேராக் மாநிலத்தையும் கிழக்கில் பகாங் மாநிலத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது. இந்த மாவட்டம், உலு சிலாங்கூர் நகராட்சி மன்றத்தால் நிர்வாகம் செய்யப் படுகிறது.
பொது
பொறுப்புகள்
பொதுச் சுகாதாரம் (Public Health )
கழிவு மேலாண்மை (Waste Removal )
நகர மேலாண்மை (Town Management )
நகரத் திட்டமிடல் (Town Planning )
சுற்றுச்சூழல் பாதுகாப்பு (Environmental Protection )
கட்டடக் கட்டுப்பாடு (Building Control )
சமூகப் பொருளாதார மேம்பாடு (Social Economic Development );
நகர்ப்புற உள்கட்டமைப்பின் பொது பராமரிப்பு (General Maintenance of Urban Infrastructure )
பத்தாங்காலி (Batang Kali )
பூலோ தெலுர் (Buloh Telor )
அம்பாங் பெச்சா (Ampang Pechah )
உலு பெர்ணம் (Ulu Bernam )
களும்பாங் (Kalumpang )
கெர்லிங் (Kerling )
கோலா குபு பாரு (Kuala Kubu Bharu )
பெரெதாக் (Peretak )
ராசா (உலு சிலாங்கூர்) (Rasa )
செரண்டா (Serendah )
சுங்கை குமுட் (Sungai Gumut )
சுங்கை திங்கி Sungai Tinggi)
புக்கிட் பெருந்தோங் (Bukit Beruntung )
புக்கிட் செந்தோசா (Bukit Sentosa )
சுங்கை புவாயா (Sungai Buaya )
லெம்பா பெரிங்கின் (Lembah Beringin )
உலு யாம் (Ulu Yam )
உலு யாம் பாரு (Ulu Yam Baharu )
மக்கள் தொகையியல்
மலேசியப் புள்ளியியல் துறை 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கிய புள்ளிவிவரங்கள்:[ 3]
உலு சிலாங்கூரில் உள்ள இனக்குழுக்கள் (2010)
இனம்
மக்கள் தொகை
விழுக்காடு
மலாய்க்காரர்கள்
133,080
70.1%
சீனர்கள்
23,498
12.4%
இந்தியர்கள்
32,459
17.1%
இதர இனத்தவர்
9,698
0.4%
மொத்தம்
189,836
100%
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
மலேசிய மாநகராட்சிகள்
மாநகராட்சிகள்