2022 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்
|
← 2017 |
6 ஆகத்து 2022 |
2027 → |
|
வாக்களித்தோர் | 92.95% (5.26%▼) |
---|
|
 |
|
2022 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் (2022 Indian vice presidential election) என்பது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 56(1) இந்தியத் துணைக் குடியரசுத் தலைவராக ஐந்தாண்டுக் காலத்திற்குப் பதவி வகிப்பவரை 6 ஆகத்து 2022 அன்று தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்தலாகும்.[1] இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்குப் பதிலாகப் பதவியேற்பார். 16 சூலை 2022 அன்று, மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கர் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் பாரதிய ஜனதா கட்சியால் பரிந்துரைக்கப்பட்டார்.[2] இத்தேர்தலில் ஜக்தீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று 346 வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை தோற்கடித்து வெற்றி பெற்றார்.[3]
தேர்தல் முறை
இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களை உள்ளடக்கிய வாக்காளர்களால் துணைக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். குறிப்பிடப்பட்ட அவையின் நியமன உறுப்பினர்களும் தேர்தல் செயல்பாட்டில் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.[4] ரகசிய வாக்கெடுப்பு மூலம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தேர்தல் அட்டவணை
குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்கள் சட்டம் 1952-ன் பிரிவு (4)-ன் துணைப்பிரிவு (1)-ன் கீழ், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணை 29 சூன் 2022.[1]
வ.எண்.
|
நிகழ்வு
|
தேதி
|
நாள்
|
1.
|
தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு
|
5 சூலை 2022
|
செவ்வாய்
|
2.
|
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி
|
19 சூலை 2022
|
3.
|
வேட்புமனுக்கள் பரிசீலனைக்கான தேதி
|
20 சூலை 2022
|
புதன்
|
4.
|
வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள்
|
22 சூலை 2022
|
வெள்ளி
|
5.
|
தேவைப்பட்டால், வாக்கெடுப்பு நடத்தப்படும் தேதி
|
6 ஆகத்து 2022
|
சனிக்கிழமை
|
6.
|
தேவைப்பட்டால், எண்ணும் தேதி எடுக்கப்படும்
|
வாக்காளார்கள்
வேட்பாளர்கள்
தேர்தல் முடிவுகள்
14வது இந்தியக் குடியரசுத் துணைக் தலைவர் தேர்தல் 2022[8]
e•d 2022 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் முடிவுகள்
|
வேட்பாளர்
|
கட்சி(கூட்டணி)
|
தேர்தல் வாக்குகள்
|
வாக்குகளின் %
|
|
ஜகதீப் தன்கர் |
பா.ஜ.க. (தே.ஜ.கூ.) |
528 |
74.37
|
|
மார்கரட் அல்வா |
இ.தே.கா. (ஒ.எ.) |
182 |
25.63
|
|
மொத்தம்
|
710
|
100
|
|
செல்லுபடியாகும் வாக்குகள் |
710 |
|
செல்லாத வாக்குகள் |
15 |
|
வாக்குப்பதிவு |
725 |
92.95%
|
புறக்கணிப்புகள் |
55 |
7.05%
|
வாக்காளர்கள் |
780 |
|
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்