இருபுரோமின் ஓராக்சைடு
இருபுரோமின் ஓராக்சைடு (Dibromine monoxide) என்பது Br2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமின் அயனியும் ஆக்சிசன் அயனியும் சேர்ந்து உருவாகும் இவ்வுப்பு அடர்பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. – 40 0 செல்சியசு வெப்பநிலையில் நிலைப்புத் தன்மையுடன் இருக்கும் இச்சேர்மம் புரோமினேற்ற வினைகளில் பயன்படுத்தப்படுகிறது[1]. தனிமவரிசை அட்டவணையில் ஒரு தொடர் மேலேயுள்ள ஆலசனின் இருகுளோரின் ஓராக்சைடுடன் ஒத்த பண்புகளை இச்சேர்மம் கொண்டுள்ளது. இருபுரோமின் ஓராக்சைடானது C2v மூலக்கூறு சீரொழுங்குடன் வளைந்த மூலக்கூறு அமைப்புடன் காணப்படுகிறது. மூலக்கூறில் உள்ள Br-O பிணைப்புகளின் பிணைப்பு நீளம் 1.85Å ஆகவும் Br-O-Br பிணைப்புகளின் பிணைப்புக் கோணம் 112 0 ஆகவும் அமைந்திருக்கிறது.[2][3] வினைகள்புரோமின் ஆவி அல்லது புரோமின் கரைசலை தாழ் வெப்பநிலையில் கார்பன் நாற்குளோரைடு மற்றும் பாதரச(II) ஆக்சைடுடன் சேர்த்துவினைபுரியச் செய்தால் இருபுரோமின் ஓராக்சைடு உருவாகிறது.:[1][3] புரோமின் ஈராக்சைடை வெப்ப இயக்கவியல் சிதைவுக்கு உட்படுத்துவதாலும் அல்லது 1:5 என்ற விகிதத்தில் புரோமின் மற்றும் ஆக்சிசன் வாயுக்களின் கலவையில் மின்சாரத்தைச் செலுத்துவதாலும் இருகுளோரின் ஓராக்சைடைத் தயாரிக்கலாம்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia