பொட்டாசியம் பெர்டெக்னிடேட்டு (Potassium pertechnetate) என்பது KTcO4 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். தெக்கினீசியமும் பொட்டாசியமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
பொட்டாசியம் பெர்டெக்னிடேட்டில் உள்ள Tc–O பிணைப்பின் இடைவெளி 173.9 பைக்கோமீட்டர்களாகும். O–Tc–O பிணைப்பின் பிணைப்புக் கோணம் 108.05° மற்றும் 110.19° ஆகவும் காணப்படுகிறது.[2]பொட்டாசியம் மற்றும் ஆக்சிசன் இடையே 289.36 பைக்கோமீட்டர்கள் மற்றும் 286 பைக்கோமீட்டர்கள் ஆகும். I41/a (இடக்குழு எண். 88) என்ற இடக்குழுவில் அணிக்கோவை அளவுருக்கள் a = 563.0 பைக்கோமீட்டர் மற்றும் c = 1286.7 பைக்கோமீட்டர் என்ற அளவுகளில் பொட்டாசியம் பெர்டெக்னிடேட்டு நாற்கோணப் படிகத்திட்டத்தில் படிகமாகிறது.[3]
பயன்கள்
பொட்டாசியம் பெர்டெக்னிடேட்டு மற்ற கதிரியக்க மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படுகிறது.[2]