மலேசியாவின் மாநில அரசுகள்
மலேசியாவின் மாநில அரசுகள் (மலாய்: Kerajaan-kerajaan Negeri di Malaysia; ஆங்கிலம்: State Governments in Malaysia; சீனம்: 马来西亚州政府) என்பது மலேசியா கூட்டமைப்பின் 13 மாநிலங்களை ஆளும் அரசாங்கங்கள் ஆகும். அனைத்து 13 மாநிலங்களும் வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறையை பின்பற்றுகின்றன. ஒவ்வொரு மாநில அரசும் தனி ஓர் ஒற்றையாட்சி மாநிலச் சட்டமன்றத்தைக் கொண்டுள்ளன. மலாயா மாநிலங்கள் மாநில ஆட்சிக்குழுக்களால் நடத்தப்படுகின்றன. சபா மாநிலம் அதற்கென தனி ஒரு சட்டமன்றத்தைக் கொண்டுள்ளது. சரவாக் மாநிலம் அதற்கென தனி ஒரு அமைச்சரவையைக் கொண்டுள்ளது. சரவாக் மாநிலத்தின் முதல்வர் சரவாக் பிரதமர் என்று அழைக்கப்படுகிறார். இருப்பினும் அனைத்து 13 மாநிலங்களிலும் உள்ள மாநில அரசு அமைப்புகள், மலேசிய நடுவண் அரசாங்கத்தின் மக்களாட்சி அமைப்பைப் போன்றதாகும்; மலேசிய மாநிலங்களின் சட்டமன்றங்கள், ஓரவை முறைமையை மட்டுமே கொண்டுள்ளன. மாநிலத்தின் தலைவர்கள்மலாயா மற்றும் போர்னியோ மாநிலங்களில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும், அந்த மாநிலத்தின் தலைவர் ஓர் ஆட்சியாளர் அல்லது ஓர் ஆளுநர் என அறியப்படுகிறார். ஆட்சியாளர்கள்
ஆளுநர்கள்
அனைத்து 13 மாநிலங்களின் தலைவர்களும் மலேசிய ஆட்சியாளர்களின் பேரவையில் உள்ளடக்கியவர்கள்; எனினும், மலாயா மாநிலங்களைச் சேர்ந்த 9 மலாய் ஆட்சியாளர்கள் மட்டுமே யாங் டி பெர்துவான் அகோங் எனும் மலேசியப் பேரரசர் பதவிக்குத் தகுதி உடையவர்கள் ஆவார்கள். மாநிலத்தின் முதலமைச்சர்மலாய் ஆட்சியாளர்களைக் கொண்ட மாநிலங்களில், அரசாங்கத் தலைவர் மந்திரி பெசார் (Menteri Besar) என்று அழைக்கப்படுகிறார்.[4] மலாய் ஆட்சியாளர்கள் இல்லாத மாநிலங்களில், அரசாங்கத் தலைவர் ஆங்கிலத்தில் முதல்வர் (Chief Minister) என்றும்; மலாய் மொழியில் கெத்துவா மந்திரி (Ketua Menteri) என்றும் அறியப்படுகிறார். சரவாக் மாநிலத்தில், அரசாங்கத்தின் தலைவர், பிரதமர் (Premier) என்று அழைக்கப்படுகிறார்.[5] மாநில அரசுகள்மலேசியாவில் உள்ள மாநில அரசுகள்: மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்{{யாங் டி பெர்துவா நெகிரி} |
Portal di Ensiklopedia Dunia