கூடாட் மக்களவைத் தொகுதி
கூடாட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kudat; ஆங்கிலம்: Kudat Federal Constituency; சீனம்: 古达国会议席) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் கூடாட் பிரிவின், கூடாட் மாவட்டம்; கோத்தா மருடு மாவட்டம்; பித்தாசு மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P167) ஆகும்.[5] கூடாட் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 2004-ஆம் ஆண்டில் இருந்து கூடாட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] கூடாட் பிரிவுகூடாட் பிரிவு என்பது சபா மாநிலத்தில் ஒரு நிர்வாகப் பிரிவாகும். கிழக்கு மலேசியாவின் சபா; சரவாக் மாநிலங்களில், பிரிவு என்பது ஒரு நிர்வாகப் பிரிவாகும். அந்த இரு மாநிலங்களிலும் ஒவ்வொரு பிரிவும் சிற்சில மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகிறது. கூடாட் பிரிவு, சபா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது. இதன் மொத்த பரப்பளவு 4,623 சதுர கிலோமீட்டர்கள் (சபாவின் மொத்த நிலப்பரப்பில் 6.3%). இந்தப் பிரிவு சபாவின் ஐந்து பிரிவுகளில் மிகச் சிறிய பிரிவாகும். கூடாட் பிரிவில் உள்ள மிகப்பெரிய நகரம் கூடாட். இதுவே முக்கியப் போக்குவரத்து மையமாகத் திகழ்கிறது. கூடாட் நகரத்தின் துறைமுகம் வழியாகக் கூடாட் பிரிவுக்கு ஏற்றுமதி இறக்குமதிச் சரக்குகள் கொண்டு செல்லப் படுகின்றன. இந்தப் பிரிவில் கூடாட் வானூர்தி நிலையம் எனும் ஒரே ஒரு வானூர்தி நிலையம் மட்டுமே உள்ளது. கூடாட் மக்களவைத் தொகுதிகூடாட் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[7] சபா பூமிபுத்ரா (65.1%) மலாயர் (17.6%) சீனர் (8.9%) இதர இனத்தவர் (8.4%)
கூடாட் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (50.54%) பெண் (49.46%)
கூடாட் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (7.96%) 21-29 (23.27%) 30-39 (23.49%) 40-49 (16.62%) 50-59 (11.81%) 60-69 (8.42%) 70-79 (4.19%) 80-89 (2.37%) + 90 (1.86%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia