லகாட் டத்து மக்களவைத் தொகுதி
லகாட் டத்து மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Lahad Datu; ஆங்கிலம்: Lahad Datu Federal Constituency; சீனம்: 拿笃国会议席) என்பது மலேசியா, சபா, தாவாவ் பிரிவு; சண்டக்கான் பிரிவு ஆகிய 2 மாநிலப் பிரிவுகளில்; லகாட் டத்து மாவட்டம், கூனாக் மாவட்டம், கினபாத்தாங்கான் மாவட்டம் ஆகிய 3 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P188) ஆகும்.[4] லகாட் டத்து மக்களவைத் தொகுதி 2019-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2022-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 2022-ஆம் ஆண்டில் இருந்து கினபாத்தாங்கான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[5] லகாட் டத்து மாவட்டம்லகாட் டத்து மாவட்டம் என்பது சபா மாநிலம், தாவாவ் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் லகாட் டத்து நகரம். சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலு மாநகரத்தில் இருந்து சுமார் 430 கி.மீ. (270 மைல்) தொலைவில் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. 2020-ஆம் ஆண்டு மலேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி லகாட் டத்து மாவட்டத்தில் 299,550 மக்கள் வசிக்கின்றனர். லகாட் டத்து'டத்து' என்பது பிலிப்பீன்சு தீவுக்கூட்டம் (Philippine Archipelago) முழுவதிலும் உள்ள ஏராளமான பழங்குடியின மக்களின் ஆட்சியாளர்களைக் குறிக்கும் ஒரு விருது. பழங்குடியின மக்களின் ஆட்சியாளர்கள் என்பது அந்த இனங்களின் தலைவர்கள், அல்லது இறையாண்மை கொண்ட மன்னர்கள் என பலவிதமாகக் குறிப்பிடுகிறது. லகாட் டத்து பகுதியை பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் (North Borneo Chartered Company) கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, லகாட் டத்து மாவட்டம் நிறுவப்பட்டது. அதன்பிறகு தென்னை கொப்பரை உற்பத்தி; மற்றும் புகையிலை உற்பத்தியில் லகாட் டத்து பகுதி சிறந்து விளங்கியது. லகாட் டத்து மக்களவைத் தொகுதிலகாட் டத்து தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[6] சபா பூமிபுத்ரா (38.5%) மலாயர் (43.47%) சீனர் (10%) இதர இனத்தவர் (7.8%)
லகாட் டத்து தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (51.91%) பெண் (48.09%)
லகாட் டத்து தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (8.81%) 21-29 (27.73%) 30-39 (24.81%) 40-49 (14.75%) 50-59 (11.32%) 60-69 (8.08%) 70-79 (2.77%) 80-89 (1%) + 90 (0.74%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia