பியூபோர்ட் மக்களவைத் தொகுதி
பியூபோர்ட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Beaufort; ஆங்கிலம்: Beaufort Federal Constituency; சீனம்: 保佛联邦选区) என்பது மலேசியா, சபா, உட்பகுதி பிரிவு, கோலா பென்யூ மாவட்டம்; பியூபோர்ட் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P177) ஆகும்.[5] பியூபோர்ட் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1995-ஆம் ஆண்டில் இருந்து பியூபோர்ட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] கோலா பென்யூ மாவட்டம்கோலா பென்யூ மாவட்டம் என்பது சபா மாநிலம், உட்பகுதி பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். கோலா பென்யூ (Kuala Penyu Town) நகரம், கோலா பென்யூ மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். சபா மாநிலம் முன்பு பிரித்தானிய வடக்கு போர்னியோ என்று அழைக்கப்பட்டது. கோலா பென்யூ மாவட்டத்தில் டூசுன் பழங்குடியினர் மிகுதியாக வாழ்கின்றனர். கோலா பென்யூ அதன் கடற்கரைகளுக்குப் பிரபலமானது. குறிப்பாக தெம்புரோங் கடற்கரை; சாவாங்கான் கடற்கரை; சுங்கை லபுவான் நீர் முகப்பு போன்ற கடற்கரைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். கோலா பென்யூ நகரின் மையத்தில் ஓடும் சுங்கை லபுவான் நதியின் பெயரில் இருந்து சுங்கை லபுவான் முகத்துவாரத்திற்குப் பெயர் பெறப்பட்டது. இந்த மாவட்டத்திற்கு "ஆமை" வடிவத்திலான கற்களில் இருந்து அதன் பெயர் பெறப்பட்டது. மலாய் மொழியில் ’கோலா’ (Kuala) என்றால் ஆற்றின் முகத்துவாரம்; ’பென்யூ’ (Penyu) என்றால் ஆமை என்று பொருள்படும். பியூபோர்ட் மக்களவைத் தொகுதிபியூபோர்ட் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[7] சபா பூமிபுத்ரா (69.4%) மலாயர் (19.6%) சீனர் (8%) இதர இனத்தவர் (3.1%)
பியூபோர்ட் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (50.33%) பெண் (49.67%)
பியூபோர்ட் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (5.51%) 21-29 (18.63%) 30-39 (21.27%) 40-49 (18.77%) 50-59 (17.18%) 60-69 (11.79%) 70-79 (4.61%) 80-89 (1.66%) + 90 (0.58%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia