கோத்தா மருடு மக்களவைத் தொகுதி
கோத்தா மருடு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kota Marudu; ஆங்கிலம்: Kota Marudu Federal Constituency; சீனம்: 哥打马鲁都国会议席) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் கூடாட் பிரிவின், கூடாட் மாவட்டம்; கோத்தா மருடு மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P168) ஆகும்.[5] கோத்தா மருடு மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 2004-ஆம் ஆண்டில் இருந்து கோத்தா மருடு மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] கோத்தா மருடு மாவட்டம்கோத்தா மருடு மாவட்டம் என்பது சபா மாநிலம், கூடாட் பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் கோத்தா மருடு. கோத்தா மருடு நகரம், கோத்தா கினபாலுவில் இருந்து வடக்கே 130 கி.மீ. தொலைவில்; போர்னியோவின் வடக்கு முனைக்கு அருகில் உள்ள கூடாட் நகரத்துடன் கோத்தா கினபாலுவை இணைக்கும் கூட்டாட்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கூடாட் பிரிவு என்பது சபா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது. இதன் மொத்த பரப்பளவு 4,623 சதுர கிலோமீட்டர்கள் (சபாவின் மொத்த நிலப்பரப்பில் 6.3%). இந்தப் பிரிவு சபாவின் ஐந்து பிரிவுகளில் மிகச் சிறிய பிரிவாகும். கோத்தா மருடு மக்களவைத் தொகுதிகோத்தா மருடு தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[7] சபா பூமிபுத்ரா (82.7%) மலாயர் (10.12%) சீனர் (5.1%) இதர இனத்தவர் (1.6%)
கோத்தா மருடு தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (50.66%) பெண் (49.34%)
கோத்தா மருடு தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (8.18%) 21-29 (25.52%) 30-39 (25.44%) 40-49 (15.9%) 50-59 (10.82%) 60-69 (7.21%) 70-79 (3.77%) 80-89 (1.94%) + 90 (1.21%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia