தெனோம் மக்களவைத் தொகுதி
தெனோம் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tenom; ஆங்கிலம்: Tenom Federal Constituency; சீனம்: 丹南联邦选区) என்பது மலேசியா, சபா, உட்பகுதி பிரிவு; தெனோம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P181) ஆகும்.[5] தெனோம் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1995-ஆம் ஆண்டில் இருந்து தெனோம் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] தெனோம் மாவட்டம்தெனோம் மாவட்டம் என்பது சபா மாநிலம், உட்பகுதி பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் தெனோம் நகரம். தெனோம் நிலப்பகுதி, முன்னர் காலத்தில் போர்ட் பர்ச் (Fort Birch) என்று அழைக்கப்பட்டது. பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் ஆளுநர் உட்போர்ட் பர்ச் (North Borneo Governor Woodford Birch) என்பவரின் பெயர் அந்த நகருக்கு வைக்கப்பட்டது. 1904-ஆம் ஆண்டில் தெனோம் தொடருந்து நிலையத்தில் இருந்து பியூபோர்ட் தொடருந்து நிலையம் , மெலாலாப் தொடருந்து நிலையம்; ஆகிய நிலயங்களுக்கு வடக்கு போர்னியோ தொடருந்து பாதை (North Borneo Railway Line) முடிந்ததைத் தொடர்ந்து, போர்ட் பர்ச் என்பது "தெனோம்" என மறுபெயரிடப்பட்டது.[7] தெனோம் நகரம்தெனோம் நகரம், கோத்தா கினபாலுவில் இருந்து தெற்கே 176 கி.மீ. தொலைவிலும்; சபாவின் பிரபலமான இடங்களில் ஒன்றான லோங் பாசியா (Long Pasia) நகரில் இருந்து வடக்கே 145 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. தெனோம் மக்களவைத் தொகுதிதெனோம் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[8] சபா பூமிபுத்ரா (72.4%) மலாயர் (12.8%) சீனர் (11.9%) இதர இனத்தவர் (2.9%)
தெனோம் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (49.95%) பெண் (50.05%)
தெனோம் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (7.64%) 21-29 (22.33%) 30-39 (23.74%) 40-49 (16.85%) 50-59 (13.88%) 60-69 (9.22%) 70-79 (3.36%) 80-89 (1.68%) + 90 (1.31%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia