கினபாத்தாங்கான் மக்களவைத் தொகுதி
கினபாத்தாங்கான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kinabatangan; ஆங்கிலம்: Kinabatangan Federal Constituency; சீனம்: 京那巴当岸联邦选区) என்பது மலேசியா, சபா, சண்டக்கான் பிரிவில்; கினபாத்தாங்கான் மாவட்டம், தொங்கோட் மாவட்டம், பெலுரான் மாவட்டம் ஆகிய 3 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P187) ஆகும்.[5] கினபாத்தாங்கான் மக்களவைத் தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1969-ஆம் ஆண்டில் இருந்து கினபாத்தாங்கான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] கினபாத்தாங்கான் மாவட்டம்கினபாத்தாங்கான் மாவட்டம் என்பது சபா மாநிலம், சண்டக்கான் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் கினபாத்தாங்கான் நகரம். இந்த நகரம், சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து வட கிழக்கே 320 கி.மீ. தொலைவிலும்; வடமேற்கே சண்டக்கான் நகரத்தில் இருந்து 77 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[7] கினபாத்தாங்கான் எனும் பெயர் முதலில் சினபாத்தாங்கான் (Cinabatangan) என்று அழைக்கப்பட்டது. நீண்ட ஆறு என்று பொருள். இதற்கு ஓங் சம் பிங் (Ong Sum Ping) எனும் சீனக் குடியேற்ற ஆளுநர் பெயரிட்டதாகவும் அறியப் படுகிறது. கினபாத்தாங்கான் மாவட்டம் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் நிர்வாகத்தின் போது நிறுவப்பட்டது. கினபாத்தாங்கான் மக்களவைத் தொகுதிசண்டக்கான் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[8] சபா பூமிபுத்ரா (65%) மலாயர் (27.6%) சீனர் (2%) இதர இனத்தவர் (5.4%)
கினபாத்தாங்கான் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (51.73%) பெண் (48.27%)
கினபாத்தாங்கான் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (8.38%) 21-29 (26.04%) 30-39 (23.62%) 40-49 (15.95%) 50-59 (12.16%) 60-69 (8.1%) 70-79 (3.16%) 80-89 (1.47%) + 90 (1.12%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia