சிபித்தாங் மக்களவைத் தொகுதி
சிபித்தாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sipitang; ஆங்கிலம்: Sipitang Federal Constituency; சீனம்: 实必丹联邦选区) என்பது மலேசியா, சபா, உட்பகுதி பிரிவு, சிபித்தாங் மாவட்டம்; பியூபோர்ட் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P178) ஆகும்.[5] சிபித்தாங் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1995-ஆம் ஆண்டில் இருந்து சிபித்தாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] சிபித்தாங் மாவட்டம்சிபித்தாங் மாவட்டம் என்பது சபா மாநிலம், உட்பகுதி பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். சிபித்தாங் (Sipitang Town) நகரம், சிபித்தாங் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். சபா மாநிலம் முன்பு பிரித்தானிய வடக்கு போர்னியோ என்று அழைக்கப்பட்டது. 1884-ஆம் ஆண்டு வரையில், சிபித்தாங் மாவட்டம், புரூணை சுல்தானகத்தின் முன்னாள் பிரதேசமாகும். நவம்பர் 5, 1884-இல், சிபித்தாங்; கோலா பென்யூ ஆகிய நிலப் பகுதிகளை பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திற்கு (North Borneo Chartered Company), அப்போதைய புரூணை சுல்தான் விட்டுக் கொடுத்தார். சிபித்தாங் கடற்கரைபுரூணை விரிகுடாவில் இருந்து 16 கி.மீ. தொலைவில் சிபித்தாங் கடற்கரை உள்ளது. லாங் மியோ (Long Mio) மற்றும் லாங் பாசியா (Long Pasia) எனும் சுற்றுச்சூழல் சுற்றுலா கிராமங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன. இந்தக் கிராமங்களில் தங்கி ஓய்வு எடுப்பதற்காக சபா, சரவாக் மாநிலங்களில் இருந்து அதிகமானோர் வருகை தருகின்றனர். மழைக்காலத்தில் சிபித்தாங்கில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது உண்டு. சிபித்தாங் மக்களவைத் தொகுதிசிபித்தாங் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[7] சபா பூமிபுத்ரா (66.2%) மலாயர் (24.6%) சீனர் (5.5%) இதர இனத்தவர் (3.6%)
சிபித்தாங் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (50.81%) பெண் (49.19%)
சிபித்தாங் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (6.73%) 21-29 (22.33%) 30-39 (23.31%) 40-49 (17.09%) 50-59 (14.49%) 60-69 (10.21%) 70-79 (3.62%) 80-89 (1.53%) + 90 (0.69%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia