கிமானிஸ் மக்களவைத் தொகுதி
கிமானிஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kimanis; ஆங்கிலம்: Kimanis Federal Constituency; சீனம்: 金马尼士联邦选区) என்பது மலேசியா, சபா, உட்பகுதி பிரிவு மற்றும் மேற்கு கரை பிரிவு எனும் பிரிவுகளில்; பாப்பார் மாவட்டம்; பியூபோர்ட் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P176) ஆகும்.[5] கிமானிஸ் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1969-ஆம் ஆண்டில் இருந்து கிமானிஸ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] பியூபோர்ட் மாவட்டம்பியூபோர்ட் மாவட்டம் என்பது சபா மாநிலம், உட்பகுதி பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். பியூபோர்ட் மாவட்டத்தின் தலைநகரம் பியூபோர்ட் நகரம். சபா மாநிலம் முன்பு பிரித்தானிய வடக்கு போர்னியோ என்று அழைக்கப்பட்டது. பியூபோர்ட் நகரம் கோத்தா கினபாலுவிற்கு தெற்கே 90 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரின் மையத்தில் படாஸ் ஆறு (Padas River) பாய்கிறது. இந்தப் படாஸ் ஆற்றில் அவ்வப்போது ஏற்படும் வெள்ளத்தைத் தவிர்ப்பதற்காக, பியூபோர்ட் நகரத்தில் உள்ள சாலைகளுக்கு மேல் உயரமாகக் கடைவீடுகள் கட்டப்பட்டு உள்ளன. பியூபோர்ட் நகரம்1890-ஆம் ஆண்டுகளில் சபாவில் உருவாக்கப்பட்ட நகரங்களில் பியூபோர்ட் நகரமும் ஒன்றாகும். சபாவில் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.[7] 1898-ஆம் ஆண்டில் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் (British North Borneo Chartered Company) நிர்வாக இயக்குநர் வில்லியம் சி. கோவி (William C. Cowie) என்பவரால் பியூபோர்ட் நகரம் நிறுவப்பட்டது. கிமானிஸ் மக்களவைத் தொகுதிகிமானிஸ் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[8] சபா பூமிபுத்ரா (67.2%) மலாயர் (23.1%) சீனர் (4.6%) இதர இனத்தவர் (5%)
கிமானிஸ் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (50.32%) பெண் (49.68%)
கிமானிஸ் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (6.35%) 21-29 (20.12%) 30-39 (23.41%) 40-49 (18.79%) 50-59 (15.28%) 60-69 (9.75%) 70-79 (3.87%) 80-89 (1.44%) + 90 (0.99%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia