இரானாவ் மக்களவைத் தொகுதி
இரானாவ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Ranau; ஆங்கிலம்: Ranau Federal Constituency; சீனம்: 兰瑙国会议席) என்பது மலேசியா, சபா மாநிலத்தின், மேற்கு கரை பிரிவு; சண்டக்கான் பிரிவு} ஆகிய பிரிவுகளில், இரானாவ் மாவட்டம்; பெலுரான் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P179) ஆகும்.[5] இரானாவ் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 2004-ஆம் ஆண்டில் இருந்து இரானாவ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] இரானாவ் மாவட்டம்இரானாவ் மாவட்டம் என்பது சபா மாநிலம், மேற்கு கரை பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் இரானாவ் நகரம்.[7] சபா மாநிலம் முன்பு பிரித்தானிய வடக்கு போர்னியோ என்று அழைக்கப்பட்டது. இரானாவ் நகரம்ம் கோத்தா கினபாலு மாநகரத்திற்கு கிழக்கே 108 கி.மீ. (67 மைல்); சண்டக்கான் நகரத்திற்கு மேற்கே 227 கி.மீ. (141 மைல்) தொலைவில் உள்ளது. இரானாவ் மாவட்டம் முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட மாவட்டம் ஆகும். மேட்டு நில வேளாண்மைஇரானாவ் மாவட்டம் அதன் மலைப்பாங்கான புவியியல் அமைப்பிற்காகப் பெயர் பெற்றது. சபா மாநிலத்தில், இந்த மாவட்டம்தான் அதிகமான மலையகக் காய்கறிகளை உற்பத்தி செய்கிறது.[8] கடல் மட்டத்தில் இருந்து 1,176 மீட்டர் உயரத்தில் இருப்பதால், சுற்றுலாத் துறையும்; மேட்டு நில வேளாண்மையும் முக்கிய தொழில்களாக உள்ளன. 2010-ஆம் ஆண்டுகளிலேயே, அதன் சுற்றுலாத் தலங்கள் அரை மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளன. இரானாவ் மக்களவைத் தொகுதிஇரானாவ் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[9] சபா பூமிபுத்ரா (82.7%) மலாயர் (11.9%) சீனர் (4%) இதர இனத்தவர் (1.4%)
இரானாவ் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (50.28%) பெண் (49.72%)
இரானாவ் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (7.66%) 21-29 (24.26%) 30-39 (25.08%) 40-49 (16.71%) 50-59 (12.01%) 60-69 (8.2%) 70-79 (3.35%) 80-89 (1.67%) + 90 (1.06%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia