துவாரான் மக்களவைத் தொகுதி
துவாரான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tuaran; ஆங்கிலம்: Tuaran Federal Constituency; சீனம்: 斗亚兰联邦选区) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் மேற்கு கரை பிரிவு, துவாரான் மாவட்டம்; கோத்தா கினபாலு மாவட்டம்; கோத்தா பெலுட் மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P170) ஆகும்.[5] துவாரான் மக்களவைத் தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1969-ஆம் ஆண்டில் இருந்து துவாரான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] துவாரான் மாவட்டம்துவாரான் மாவட்டம் என்பது சபா மாநிலம், மேற்கு கரை பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் துவாரான் நகரம் (Tuaran Town).[7] சபா, மேற்கு கரை பிரிவில் உள்ள ஏழு மாவட்டங்களில் துவாரான் மாவட்டமும் ஒன்றாகும். சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது.[8] துவாரான் எனும் பெயரின் தோற்றம் ஓரளவுக்கு இன்னும் அறியப் படாமல் உள்ளது. இருப்பினும் பிரித்தானியர்களின் வருகைக்கு முன்பே இருந்து துவாரான் நகரில் ஒரு குடியேற்றம் இருந்துள்ளது. 1800-ஆம் ஆண்டுகளில் இசுடாம்போர்டு இராஃபிள்சு துவாரான் எனும் பெயரைப் பயன்படுத்தி உள்ளார்.[9][10] துவாரான் மக்களவைத் தொகுதிதுவாரான் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[11] சபா பூமிபுத்ரா (74.1%) மலாயர் (16.4%) சீனர் (7.5%) இதர இனத்தவர் (1.8%)
துவாரான் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (49.79%) பெண் (50.21%)
துவாரான் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (7.75%) 21-29 (22.31%) 30-39 (23.93%) 40-49 (16.88%) 50-59 (13.83%) 60-69 (9.08%) 70-79 (3.59%) 80-89 (1.65%) above 90 (0.98%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia