கோத்தா கினபாலு மக்களவைத் தொகுதி
கோத்தா கினபாலு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kota Kinabalu; ஆங்கிலம்: Kota Kinabalu Federal Constituency; சீனம்: 亚庇国会议席) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் மேற்கு கரை பிரிவு, கோத்தா கினபாலு மாவட்டம்; பெனாம்பாங் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P172) ஆகும்.[5] கோத்தா கினபாலு மக்களவைத் தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1969-ஆம் ஆண்டில் இருந்து கோத்தா கினபாலு மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] கோத்தா கினபாலு மாவட்டம்கோத்தா கினபாலு மாவட்டம் என்பது சபா மாநிலம், மேற்கு கரை பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் கோத்தா கினபாலு நகரம். சபா, மேற்கு கரை பிரிவில் உள்ள ஏழு மாவட்டங்களில் கோத்தா கினபாலு மாவட்டமும் ஒன்றாகும். சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவை மையமாகக் கொண்டுள்ளது. கோத்தா கினபாலு மாவட்டம் 350 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது 2020-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கோத்தா கினபாலு மாவட்டத்தின் மக்கள் தொகை சுமார் 5,00,425. கோத்தா கினபாலு மாவட்டத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவின் பழைய பெயர் 'ஜெசல்டன்' (Jesselton). 1890-களில் அது ஒரு மீனவர் கிராமமாக இருந்தது. பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் புதிய நிர்வாக மையத்திற்கு ஜெசல்டன் என்று பெயர் வைக்கப்பட்டது.[7] கோத்தா கினபாலு மக்களவைத் தொகுதிகோத்தா கினபாலு தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[8] சபா பூமிபுத்ரா (21.4%) மலாயர் (8.3%) சீனர் (67%) இதர இனத்தவர் (3.4%)
கோத்தா கினபாலு தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (49.03%) பெண் (50.97%)
கோத்தா கினபாலு தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (3.32%) 21-29 (14.06%) 30-39 (19.12%) 40-49 (18.19%) 50-59 (16.55%) 60-69 (16.09%) 70-79 (8.69%) 80-89 (2.85%) + 90 (1.12%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia