லிபரான் மக்களவைத் தொகுதி
லிபரான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Libaran; ஆங்கிலம்: Libaran Federal Constituency; சீனம்: 利巴兰联邦选区) என்பது மலேசியா, சபா, சண்டக்கான் பிரிவு; சண்டக்கான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P184) ஆகும்.[5] லிபரான் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1995-ஆம் ஆண்டில் இருந்து லிபரான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] சண்டக்கான் மாவட்டம்சண்டக்கான் மாவட்டம் என்பது சபா மாநிலம், சண்டக்கான் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் சண்டக்கான் நகரம். மலேசியா-பிலிப்பீன்சு எல்லை (Malaysia–Philippines Border), இந்த மாவட்டத்தின் கிழக்கே 28 கி.மீ. தொலைவில்; மிக அருகில் உள்ளது. சபா மாநிலத்தின் கிழக்குக் கடற்கரையில் சுலு கடல் உள்ளது. அதை எதிர்நோக்கியவாறு அமைந்துள்ள இந்த மாவட்டம், இதர மாவட்டங்களான பெலுரான் மாவட்டம், கினபாத்தாங்கான் மாவட்டம் ஆகிய மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது.[7] சண்டக்கான் நகரம், சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவிற்கு அடுத்து இரண்டாவது மிகப் பெரிய நகரமாக விளங்குகிறது. வடகிழக்கு போர்னியோ கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. முன்பு பிரித்தானிய வடக்கு போர்னியோவின் (British North Borneo) தலைநகராகவும் இருந்தது. [8] லிபரான் மக்களவைத் தொகுதிலிபரான் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[9] சபா பூமிபுத்ரா (31.9%) மலாயர் (42.3%) சீனர் (16%) இதர இனத்தவர் (9.7%)
லிபரான் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (51.43%) பெண் (48.57%)
லிபரான் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (8.16%) 21-29 (26.58%) 30-39 (23.78%) 40-49 (16.72%) 50-59 (11.61%) 60-69 (8.12%) 70-79 (3.24%) 80-89 (1.17%) + 90 (0.62%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia