தாவாவ் மக்களவைத் தொகுதி
தாவாவ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tawau; ஆங்கிலம்: Tawau Federal Constituency; சீனம்: 斗湖联邦选区) என்பது மலேசியா, சபா, தாவாவ் பிரிவு; தாவாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P190) ஆகும்.[5] தாவாவ் மக்களவைத் தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1969-ஆம் ஆண்டில் இருந்து தாவாவ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] தாவாவ் மாவட்டம்தாவாவ் மாவட்டம் என்பது சபா மாநிலம், தாவாவ் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் தாவாவ் நகரம். கோத்தா கினபாலு மாநகரத்தில் இருந்து சுமார் 531 கி.மீ. (330 மைல்) தொலைவிலும் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலு மாநகரத்தில் இருந்து சுமார் 452 கி.மீ. (280 மைல்) தொலைவில் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. 1900-ஆம் ஆண்டுகளில், தாவாவ் மாவட்டத்தில் குகாரா தோட்டம், குபோத்தா தோட்டம் எனும் பெரும் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. அந்தத் தோட்டங்களில் ரப்பர், சணல், தென்னை போன்றவை பயிர் செய்யப்பட்டன. போர்னியோ காடுகள்தாவாவ் மாவட்டத்தின் தென் கிழக்குப் பகுதியில், சுலாவெசி கடலும், சூலு கடலும் அமைந்துள்ளன. மேற்குப் பகுதியில் அடர்ந்த போர்னியோ காடுகள் உள்ளன. இந்த மாவட்டத்தின் தென் பகுதியில் இந்தோனேசியாவின் கலிமந்தான் பெருநிலம் உள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தாவாவ் நகரை நிர்வாகம் செய்து வந்த பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம், மறு சீரமைப்பு செய்வதில் தீவிரமான கவனம் செலுத்தியது. 1963-ஆம் ஆண்டு, பிரித்தானிய பேரரசிடம் இருந்து சபா விடுதலை பெற்றது. தாவாவ் மக்களவைத் தொகுதிதாவாவ் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[7] சபா பூமிபுத்ரா (16.5%) மலாயர் (44.6%) சீனர் (30.7%) இதர இனத்தவர் (8.3%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia