கலாபாக்கான் மக்களவைத் தொகுதி
கலாபாக்கான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kalabakan; ஆங்கிலம்: Kalabakan Federal Constituency; சீனம்: 加拉峇干国会议席) என்பது மலேசியா, சபா, தாவாவ் பிரிவு; தாவாவ் மாவட்டம்; கலாபாக்கான் மாவட்டம் ஆகிய 2 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P191) ஆகும்.[5] கலாபாக்கான் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 2004-ஆம் ஆண்டில் இருந்து கலாபாக்கான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] கலாபாக்கான் மாவட்டம்கலாபாக்கான் மாவட்டம் என்பது சபா மாநிலம், தாவாவ் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் கலாபாக்கான் நகரம். கோத்தா கினபாலு மாநகரத்தில் இருந்து சுமார் 531 கி.மீ. (330 மைல்) தொலைவிலும் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலு மாநகரத்தில் இருந்து சுமார் 235 கிலோமீட்டர்கள் (146 mi)) தொலைவில் அமைந்துள்ளது. கலாபாக்கான் மாவட்டத்தின் தெற்கில், இந்தோனேசியா மாநிலமான வடக்கு கலிமந்தானின் நுனுக்கான் துணை மாநிலம் எல்லையாக உள்ளது. கோவி விரிகுடாஇந்த மாவட்டத்தின் தென்கிழக்கில், கோவி விரிகுடா சூழ்ந்துள்ளது. சுலாவெசி கடலின் ஒரு பகுதி; மற்றும் வாலஸ் விரிகுடா (Wallace Bay); ஆகியவை மேற்கு கடற்கரையில் இருந்து கலாபாக்கனைப் பிரிக்கின்றன. கலாபாக்கான் என்ற இடத்தின் பெயர் தீடோங் மொழியில் இருந்து வந்தது. கலாபாக்கான் என்றால் "சாப்பிடலாம்" என பொருள்படும். இந்தப் பகுதியில் மூருட் மற்றும் திடோங் பழங்குடியின மக்கள் மிகுதியாய் வாழ்கின்றனர். கலாபாக்கான் மக்களவைத் தொகுதிகலாபாக்கான் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[7] சபா பூமிபுத்ரா (18.3%) மலாயர் (58.8%) சீனர் (8.8%) இதர இனத்தவர் (14%)
கலாபாக்கான் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (51.34%) பெண் (48.66%)
கலாபாக்கான் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (7.69%) 21-29 (27.03%) 30-39 (26.27%) 40-49 (15.51%) 50-59 (10.58%) 60-69 (8.53%) 70-79 (2.81%) 80-89 (0.99%) + 90 (0.6%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia