தமுல்பூர் மாவட்டம்
தமுல்பூர் மாவட்டம் (Tamulpur district), வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தின் போடோலாந்து பிரதேசத்தில் அமைந்துள்ளது. இதன் தலைமையிடம் தமுல்பூர் ஆகும். பாக்சா மாவட்டத்தின் சில தாலுகாக்களைக் கொண்டு 23 சனவரி 2022 அன்று தமுல்பூர் மாவட்டம் நிறுவப்பட்டது.[2]இதன் தலைமையிடம் தமுல்பூர் ஆகும். மக்கள் தொகை பரம்பல்2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, தமூல்பூர் மாவட்டத்தின் மக்கள் தொகை 3,89,150 ஆகும். இதன் மக்கள் தொகையில் 1.45% பேர் மட்டுமே நகர்புறங்களில் வாழ்கின்றனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 970 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 42,246 (10.86%) மற்றும் 121,321 (31.17%) ஆக உள்ளனர்.[1]இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 83.36%, முஸ்லீம்கள் 12.97%, கிறித்தவர்கள் 3.22% மற்றும் பிறர் 0.45% ஆக உள்ளனர்.[3]இம்மாவட்டத்தில் அசாமிய மொழி 36.96%, போடோ மொழி 22.33%, வங்காள மொழி 5.18%, நேபாளி மொழி 4.67%, சந்தாளி மொழி 0.96% மற்றும் நாக்பூரி மொழி 0.93% மக்களால் பேசப்படுகிறது.[4] இதனையும் காண்கReferences
|
Portal di Ensiklopedia Dunia