மாஜுலி மாவட்டம்
மாஜுலி மாவட்டம் (Majuli district)[1]வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தின் வடகிழக்கில் மேல் அசாம் கோட்டத்தில், பிரம்மபுத்திரா ஆற்றில் அமைந்த பெரிய தீவான மாஜுலியை 2016ஆம் ஆண்டில் மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்டது..[2].[3]ஜோர்ஹாட் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு இப்புதிய மாஜுலி மாவட்டம் 8 செப்டம்பர் 2016 அன்று நிறுவப்பட்டது.[4] இதன் நிர்வாகத் தலைமையிடம் கர்மூர் ஆகும்.இம்மாவட்டம் மிசிங் தன்னாட்சிக் குழுவில் உள்ளது.[5] பொருளாதாரம்இம்மாவட்டத்தின் முதன்மை பொருளாதாரம் நெல் பயிரிடுதல் மற்றும் பருத்தி மற்றும் பட்டுத் துணி நெசவு ஆகும். பிரம்மபுத்திரா ஆற்றில் மீன் பிடித்தல், மட்பாண்டம் செய்தல் மற்றும் பால்பண்ணை ஆகியவை பிற தொழில்கள் ஆகும். பரணிடப்பட்டது 2017-05-01 at the வந்தவழி இயந்திரம்</ref> மக்கள் தொகை பரம்பல்2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, மாஜுலி மாவட்ட மக்கள் தொகை 1,67,304 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 955 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 23,878 (14.27%) மற்றும் 77,603 (46.38%) ஆக உள்ளனர்.[6] Hinduism is the predominant religion, practiced by 99.04% of the population.[7] இம்மாவட்ட மக்களில் பெரும்பான்மையாக வைணப் பிரிவான ஏகசரண தர்மத்தைப்[8] பின்பற்றுகின்றனர். இம்மாவட்டத்தில் அசாமிய மொழி 54.47%, மிசிங் மொழி[9] 41.01%, வங்காள மொழி 1.66%, தேவ்ரி மொழி[10] 1.22%, இந்தி மொழி 0.90%, நேபாளி மொழி 0.46% மற்றும் பிற மொழிகள் 1.64% மக்கள் பேசுகின்றனர்.[11] அரசியல்இம்மாவட்டம் மாஜுலி சட்டமன்றத் தொகுதி மற்றும் லக்கிம்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia