மிசிங் மக்கள்
மிசிங் மக்கள் (Mising people), இந்தியாவின் வடகிழக்கில் அமைந்த அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்கள் மற்றும் திபெத் தன்னாட்சிப் பகுதிகளில் வாழும் மலைவாழ் பழங்குடி இன மக்கள் ஆவார். இம்மக்கள் சீன-திபெத்திய கலப்பு இன மக்கள் ஆவார். இவர்கள் சீன-திபெத்திய மொழிகளின் கிளை மொழிகளான மிசிங் மொழி மற்றும் தானி மொழிகளைப் பேசுகின்றனர். மக்கள் தொகை பரம்பல்
சொற்பிறப்பியல்மிசிங் மொழியில் மிசிங் என்பதற்கு மண்ணின் மைந்தர்கள் என்று பொருள். அசாம் சமவெளி மக்களால் மிசிங் எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது. மேலும் மிசிங் என்ற சொல்லின் தோற்றம் அசாமில் பாயும் சியாங் ஆற்றுடன் (பிரம்மபுத்திரா ஆறு) தொடர்புறுத்துவதாக நம்பப்படுகிறது வரலாறுசீன-திபெத்திய மொழிகள் பேசும் பெரிய இனக் குழுவான தானி மக்களின் உட்பிரிவினரே மிசிங் மக்கள் எனக் கருதப்படுகிறது. மிசிங் மக்கள் இந்தியாவில் அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் மாநிலங்களிலும் மற்றும் சீனாவில் உள்ள திபெத் தன்னாட்சிப் பகுதிகளில் அதிகமாக வாழ்கின்றனர். திபெத்திய மக்கள் தானி மக்களை லோபோ மக்கள் என அழைக்கின்றனர்.[18]திபெத்திய மொழியில் லோபோ எனில் தெற்கத்தியர்கள் என்று பொருள். ஏனெனில் இம்மக்கள் திபெத் தன்னாட்சிப் பகுதிக்கு தெற்கில் வாழ்கின்றனர். திபெத்திய மக்கள் மிசிங் மக்களை லோபோ மக்களின் ஒரு உட் பிரிவினர் என்று கருதுகின்றனர். பழைய காலங்களில், மிசிங் மக்கள் மற்றும் தானி மக்கள், திபெத்தியர்களுக்கு இறைச்சி மற்றும் கம்பளிக்கு ஈடாக வாள்கள் மற்றும் பிற உலோகங்களை வர்த்தகம் செய்தனர். மேலும் அவர்களுக்கென தனி எழுத்து மொழி இல்லாததால் திபெத்திய மொழி எழுத்துத் தொடர்புக்காகப் பயன்படுத்தினர்.[19] அசாமில் மிசிங் மக்களைப் பற்றிய முதல் குறிப்புகள், அகோம் இராச்சியத்திடமிருந்து பெறப்பட்டுள்ளது. அக்காலத்தில் பிரம்மபுத்திரா சமவெளிகளின் வடக்கில் இடம்பெயர்ந்த மிசிங் மக்கள் சுதந்திர மலைவாழ் பழங்குடியினராக இருந்தனர். 1615 ஆம் ஆண்டில், மிசிங் மக்கள் அகோம் இராச்சியத்த்தை தாக்கினர். மிசிங் மக்களை தாக்க அனுப்பப்பட்ட அகோம் இராச்சிய படைகள் தோல்வியடைந்தது. 1655 ஆம் ஆண்டில், மிசிங் மக்கள் மற்றொரு தாக்குதலை அகோம் இராச்சியத்தினர் மீது தொடங்கினர். இதன் விளைவாக அகோம் இராச்சியப் படைகள் வெற்றிகரமாக எதிர்த்தாக்குதலை நடத்தி, மிசிங் மக்களை வென்றனர். இதனால் மிசிங் மக்கள் அகோம் இராச்சியத்தினருக்கு ஆண்டுதோறும் கப்பம் செலுத்த ஒப்புக்கொண்டனர். மேலும் மிசிங் மக்கள் எரித்த அகோம் இராச்சிய வீரர்களுக்கு ஈடாக 12 மிசிங் மக்களை வழங்கினர். பின்னர் அகோம் இராச்சிய நிர்வாகத்தில் உயர் பதவிகளில் பல மிசிங் மக்களுக்கு வழங்கப்பட்டது. மிசிங் மக்கள் மற்ற மலைவாழ் பழங்குடியினரை விட அசாமியர்களுடன் அதிக கலாச்சார தொடர்பு கொண்டவர்கள்.[20] வில் வீரர்களான மிசிங் மக்கள் அகோம் இராச்சியத்தின் போர்ப்படையில் வில்லாளிகள் படையில் பணிபுரிந்தனர். அகோம் இராணுவத்தில் பணியமர்த்தப்பட்ட மிசிங் வில் வீரர்கள், திமாசா ராச்சியம் மீது படை எடுத்த போது, அகோம் இராணுவத்திற்கு உணவு வழங்குவதைத் தடுத்த நாக மக்களை அடக்குவதில் பெரும் பங்காற்றினர். அகோம் இராச்சிய மன்னர் ருத்திர சிங்கா[21] (1665–1714) ஜெயந்தியா இராச்சியத்தின் மீது படையெடுத்த போது, மிசிங் வில் வீரர்கள் போரில் கலந்து கொண்டனர். அகோம் இராச்சிய மன்னர் ருத்திர சிங்கா ஆட்சியில் அமைதியாக இருந்த மிசிங் மக்கள், 17ஆம் நூற்றாண்டில் சதியா[22] நகரத்தில் வாழ்ந்த மிசிங் மக்கள் அகோம் இராச்சியத்தினருக்கு தொல்லைகள் கொடுத்தாலும் பெரும்பாலான மிசிங் மக்கள் அமைதியாக வாழ்ந்தனர். 18ஆம் நூற்றாண்டில் அகோம் இராச்சியத்திற்கு எதிரான மோமோரியா கிளர்ச்சியின்[23]போது மிசிங் மக்கள் நடுநிலையாக இருந்தனர்..[24] தன்னாட்சி இயக்கம்1990களில் தன்னாட்சி கோரி போராட்டங்கள் நடத்தியதின் விளைவாக, மிசிங் மக்கள் தன்னாட்சியாக வாழ்வதற்கு, மிசிங் மக்கள் பெரும்பான்மையாக வாழும் அசாமின் 36 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய 40 உறுப்பினர்கள் கொண்ட மிசிங் தன்னாட்சி குழு 1995ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மிசிங் தன்னாட்சிக் குழுவின் 36 உறுப்பினர்களை 36 சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து தேர்தலில் வெற்றி பெற்றவர்களையும், 4 உறுப்பினர்களை அசாம் அரசு நியமிக்கும். மக்கள் தொகை பரம்பல்2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, அசாம் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் மட்டும் 8 இலட்சம் மிசிங் மக்கள் வாழ்கின்றனர். அருணாசலப் பிரதேசத்தின் கிழக்கு சியாங் மாவட்டத்தில் சிறுபான்மையாக மிசிங் மக்கள் வாழ்கின்றனர். சமயம்பெரும்பாலான மிசிங் மக்கள் தங்களுக்கு என தனி ஆன்மவாத நம்பிக்கை கொண்டுள்ளனர். இவர்களுக்கு கடவுளர்கள் சூரியன் மற்றும் சந்திரன் ஆவார். இருப்பினும் வைணவத்தின் ஒரு பிரிவான ஏகசரண தர்மத்தை[25]பின்பற்றுகின்றனர். மிசிங் மக்களில் ஒரு பிரிவினர் தோனெய்-போலோ மற்றும் கிறித்தவ சமயங்களையும் பின்பற்றுகின்றனர். அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia